💐ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயிக்கும் கட்டங்கள் எவை?💐
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. மணவாழ்க்கை சிலருக்கு மிக எளிதாகக் கூடி வந்து விடும். ஒரு சிலருக்குச் சிறிது முயற்சிகளின் மூலம் நடக்கிறது. திருமணத்திற்கு ஜாதக கட்டங்கள் எவ்வளவு அவசியமாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம். வாருங்கள் இப்பகுதியில் காண்போம்!ஜோதிட சாஸ்திரம் என்றால் என்ன?
ஜோதிடம் என்பது அறிவியலும், ஞானமும் இணைந்தது. நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள்தான் அவர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கின்றது.
ஜாதகம் என்ன சொல்கிறது?
ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது நவகிரகங்கள், ராசி கட்டத்தில் இருக்கின்ற நிலையை நமக்குத் தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இதன் மூலம் நம்முடைய கர்ம வினையின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள முடியும். ஜாதகப்படி அனைவருக்கும் அனைத்து யோகம் உண்டு என்று கணித்துச் சொல்கின்றனர். ஆனால் அவைகளின் நிலைகளை இவ்வளவுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
திருமண யோகம்:
திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. இதில் பிரதானமாக முதலில் லக்னம் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து தான் நாம் மற்ற அமைப்புகளைக் கணக்கிடுகின்றோம். இதில் 2,4,5,7,8 ஆகிய வீடுகளிலிருந்துதான் கல்யாண யோகமும், தோஷமும் அறியப்படுகிறது.
ஜாதக தோஷங்கள்:
செவ்வாய், ராகு கேது, மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் போன்றவை ஜாதக தோஷங்கள் ஆகும். இந்த தோஷங்கள் ஜாதகத்தில் நட்சத்திரங்களின் அமைப்புகளைப் பொறுத்து அமையும்.
நட்சத்திர விஷயங்கள்:
அன்றைய காலத்தில் நட்சத்திர பொருத்தம், பெயர் ராசிப் பொருத்தம் பார்த்து மட்டுமே திருமணம் செய்தனர். தற்போது நட்சத்திரம், ஜாதகம், யோகம் மற்றும் சம தோஷம் போன்ற பொருத்தங்கள் சரியாக பார்த்துத் திருமணம் செய்யப்படுகின்றன. பல ஜோதிட விஷயங்கள் ஆதாரம் இன்றி மக்களிடையே பரப்பப்பட்டு விட்டன. அவரவர் தனிப்பட்ட ஜாதக அமைப்புப்படி யோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். அதேபோல் அவயோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். ஆகையால் ஜாதக கிரக அமைப்புக்களைச் சீர்தூக்கிப் பார்த்து தகுந்த ஜாதகங்களைச் சேர்ப்பதே சிறந்த வழியாகும்.
கோச்சார கிரக அமைப்பு:
கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களைக் குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவையாகும். கோச்சாரத்தில் குரு பலன் பற்றி எல்லோரும் அறிவார்கள். குரு பலன் வந்துவிட்டதா என்று கேட்பார்கள். எனினும் இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை.
குரு பலன் இல்லாதபோதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுத்தி, அந்த யோக நேரமே நமக்குச் சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன. ஆகையால், குரு பலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். 8 ஆம் இடத்தில் கோச்சாரத்தில் குரு இருப்பினும், குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2 ஆம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் எந்த விதமான தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தைக் கொடுப்பார்.
நித்ரா மேட்ரிமோனி, உங்கள் திருமண வாழ்க்கையை பூக்கள் போல மலரச் செய்வதற்கான சிறந்த சேவையை வழங்குகிறது. உங்கள் விவரங்களைப் பதிவு செய்து, உங்களுக்குப் பிடித்த மணமகனையும், மணமகளையும் நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் உங்களுக்குப் பிடித்த இடத்தில் உள்ள அனைத்து வரன்களையும் விவரங்களுடன் பார்ப்பதற்கு நித்ரா மணமாலை ஒரு அற்புதமான வரமாகும்!