குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 மேஷ ராசி!!
🎉 எதிலும் துரிதமாகவும்..! வேகமாகவும்..! செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! இதுவரை ஜென்ம ஸ்தானமான ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ஆம் (01.05.2024) நாள் முதல் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார். குடும்ப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். இந்தப் பதிவில் மேஷ ராசிக்கான 2024-2025ஆம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மேஷ ராசிக்கு நல்ல துணை அமைய வேண்டுமா? இது திருமணத்துக்கு சாதகமான காலம். நித்ரா மேட்ரிமோனியில் இன்று பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டறியுங்கள்!குருவின் பார்வை பலன்கள்:
🎉 குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் வழக்கு பிரச்சனைகள் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.🎉 குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் தூரத்து உறவினர்களின் வருகை உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல்கள் கைகூடிவரும்.
🎉 குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் நிர்வாக திறன் மேம்படும். சேவை தொடர்பான செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நிறுவனம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த சில உதவிகளால் மேன்மை ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
குரு ராசியில் நின்ற பலன்:
🎉 இரண்டாம் வீட்டில் குரு நிற்பதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடிவரும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். முகத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி மனதளவில் தெளிவும், தனவரவு தொடர்பான எண்ணங்களும் அதிகரிக்கும்.குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:
குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,🎉 தனவரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும்.
குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
🎉 பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள்.
குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
🎉 கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் திருப்தியில்லாத சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும்.
குரு வக்கிர பலன்கள்:
குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:🎉 தனம் சார்ந்த விஷயங்களில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். உறவினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். தாயின் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
பொதுவான பலன்கள்:
பெண்கள்:🎉 பெண்களுக்கு தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தாயாருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.
மாணவர்கள்:
🎉 மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் விலகும். புதுவிதமான துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். தடைபட்ட கல்விப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்:
🎉 உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் சாதகமாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த பணிகளில் இருந்துவந்த அலட்சிய போக்கு மறையும். சக ஊழியர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் மாறுபடும். பணி நிமிர்த்தமான சில பயணங்கள் கைகூடும்.
வியாபாரிகள்:
🎉 வியாபாரத்தில் புதிய வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். கமிஷன் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
கலைஞர்கள்:
🎉 கலைத்துறையில் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதுவிதமான அனுபவங்களால் மாற்றம் ஏற்படும். விமர்சனப் பேச்சுக்கள் படிப்படியாக குறையும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இசை துறைகளில் தனிப்பட்ட நாட்டம் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும்.
அரசியல்வாதிகள்:
🎉 அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தலைமை அதிகாரிகளுடன் நெருக்கமாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் உயரும். விமர்சனப் பேச்சுக்களின் தன்மையறிந்து செயல்படுவது நல்லது.
நன்மைகள்:
🎉 நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளும், வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகளும் கிடைக்கும்.
கவனம்:
🎉 நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் செலவுகளின் தன்மையிலும், சிந்தனை போக்கிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வழிபாடு:
🎉 செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர ஒத்துழைப்பும், மேன்மையும் ஏற்படும்.
முடிவுரை:
🎉 மேஷ ராசி அன்பர்களே..!! இந்த குரு பெயர்ச்சியில் பொதுவாக 40/100 சதவீதங்களை மட்டும் பெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் கப்சிப் என இருந்து கவனத்தோடு செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொது பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் வரன் பார்க்குறீங்களா? திருமண வாழ்க்கைக்கு ஏற்ற துணையை தேடி தவிக்கிறீங்களா? கவலை வேண்டாம்! நித்ரா மேட்ரிமோனியில் உங்கள் ஜாதகத்தை பதிவு செய்து, உங்களுக்கு பொருத்தமான துணையை எளிதாக கண்டறியுங்கள்! குரு பகவானின் அருளால் உங்களுக்கு நல்ல துணை விரைவில் அமையும்.