ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?
👉 ஏழரைச் சனி காலம் என்பது மக்களுக்குப் பல அனுபவங்களைக் கற்றுத் தரும் காலம். சனி பகவான் ஒருவனுக்கு ஏழரை வருடங்கள் பல கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கையின் பாடத்தை புரிய வைப்பார் என்பதே இதன் உண்மையான விளக்கமாகும். பலருக்கு திருமணம் என்றால் ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம். அதனால், திருமணம் எப்போது செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று பல கேள்விகள் மனதில் எழும். அதில் ஒரு முக்கியமான கேள்வி ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? என்பதே. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்று நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம். நீங்களும் தோஷம் உள்ளவாரா? இன்னும் உங்களுக்குப் பொருத்தமான வரன் அமையவில்லையா? அப்போ நீங்க சரியான தளத்தில் தான் உள்ளீர்கள். ஆமாங்க! நித்ரா மேட்ரிமோனி தான் தமிழகத்தில் நம்பர் ஒன். இங்கே எண்ணற்ற ஐடி வெரிஃபை புரொபைல்ஸ் உள்ளன. உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க!!ஏழரை சனி என்றால் என்ன?
👉 சனி பகவான் ஒரு ராசியில் 2.5 ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவருக்கு ஜாதகத்தில் சனி பகவான் 7.5 ஆண்டுகள் சஞ்சரிக்கும் காலத்தை "ஏழரை சனி" என்று அழைப்பார்கள். இது ஒருவருக்கு வாழ்க்கையில் பல சவால்களையும், மாற்றங்களையும் கொண்டு வரும் காலம் என்று கருதப்படுகிறது.ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?
👉 திருமணம் செய்வதற்கு பொதுவாக கிரக பலன் அதாவது, காலமும் நேரமும் ஒத்துழைத்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும். ஜோதிடத்தில் காலம், நேரம் என்பது திருமணத் திசை என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இந்த திருமணத் திசை ஜாதகத்தில் நடப்பில் இருந்தால் மட்டுமே திருமண யோகம் வரும். அதன் பிறகு ஜாதகத்தில் குருபலன் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் மிகவும் அவசியமாகும்.👉 சராசரியாக, பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு பாக்கியம் தொடங்குகிறது. திருமண பந்தத்தில் ஆண், பெண் இருவரின் கர்ம வினைகளும் கலந்து, பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானங்கள் முழுமையாகச் செயல்படுகின்றன.
👉 ஒரு ஆண் மகனுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலத்தில், அவருக்கு குடும்பம் என்றால் என்ன? தன் மனைவி - குழந்தைகளுக்கு நிறைவேற்ற கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம் மற்றும் உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கையின் தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.
👉 அதே போல், பெண் மகளுக்கு கணவன் மற்றும் புகுந்த வீட்டாருடன் அனுசரித்து வாழ்வது எப்படி? கணவனின் வருமானத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போன்ற இல்வாழ்க்கை உண்மைகளையும் புரிய வைப்பார்.
👉 சனிபகவான் சுயம்வரத்திற்கு எந்த தடையும் கொடுக்க மாட்டார், அதனால் ஏழரை சனி நடைபெறும் காலத்திலும் கூட மாலையும் கழுத்துமாக மணமேடை ஏறலாம். ஆனால், இப்படி திருமணம் செய்வது என்பது அனைவருக்குமே பொருந்தாது. ஏனெனில், ஏழரை சனி வாழும் காலத்தில் 3 சுற்றுகள் நிகழும். அவற்றை மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி என்பனவாகும். ஏழரை சனி என்பது ஒருவருக்கு 20 வயதிற்குள் வந்துவிடும்.
👉 முதல் சனிச் சுற்றில் திருமணம் யோகமானது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் சிறிது காலம் தாழ்த்தியே திருமணம் செய்வது நல்லது.
👉 அதாவது, ஏழரை சனியானது ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி, ராசிக்கு வந்தால், அது ஜென்ம சனியாகும், அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வந்தால் அது குடும்ப சனி என்றும் கூறுவார்கள்.
👉 ஒருவரின் ஜென்ம ராசியில் ஏழரைச் சனி இருக்கும் போது திருமணம் செய்தால் திருமண வாழ்வில் தீராத பல குழப்பங்கள் வரும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறையும். நோய் தாக்கம், குழந்தைப் பாக்கியம் இல்லாமை, குறைவான மாங்கல்யப் பலம் மற்றும் திருமண வாழ்க்கையின் சந்தோஷம் நீங்கி, கஷ்ட நிலைகள் அதிகமாகும் என்று ஜோதிடத்தில் கூறியுள்ளனர்.
👉 எனவே, ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா என்பது ஜாதகத்தை பொறுத்தது. ஜோதிடரின் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வேறு ராசியில் ஏழரைச் சனி நடக்காத நபரை திருமணம் செய்து கொள்ளலாம். பாதிப்புகள் அதிகமாக இருக்காது.
முடிவுரை:
👉 அன்பார்ந்த பயனாளர்களே!! ஜனன கால ஜாதகப்படி, பல்வேறு தோஷங்களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஏழரைச் சனியின் காலத்தில் நம்பிக்கையுடன் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். உங்களுக்கும் விரும்பிய வரன்கள் கைகூடி வர வேண்டுமா? வரன் தேடிக் கொண்டே இருக்கிறீர்களா? இன்னைக்கே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!! வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்!!