ஏகாதசி விரத நாட்கள்!
முன்னுரை
👉 ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் கடைந்தபோது அமிர்தம் வெளிவந்தது இந்த ஏகாதசி நாளில்தான். ஏகாதசி விரதம் என்பது விஷ்ணு பகவானை காக்க, ஏகாதசி எனப்படும் விஷ்ணுவின் மறு அவதாரத்தை போற்றும் நாளாகும். நாம் இந்தப் பதிவில் 2025 ஏகாதசி விரத நாட்கள் பற்றி தெரிந்து கொள்வோம். திருமணம் கைகூடாமல் தாமதமாகும் அன்பர்கள் இந்த ஏகாதசி திதி விரதம் கடைபிடிக்கலாம். சொந்தத்தில் வரன் அமையவில்லை என்று கவலை கொள்பவர்கள் நித்ரா மேட்ரிமோனியில் இன்றே ரெஜிஸ்டர் செய்யுங்கள்!
ஏகாதசி வகைகள்
👉 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர், கதை, தனி மகிமைகள் உண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருப்பது வெவ்வேறு பலன்களைத் தரும். வைகுண்ட ஏகாதசி 2025 தேதி நேரம் ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை, புனித வைகுண்ட ஏகாதசி விழா அனுசரிக்கப்படுகிறது.
ஏகாதசி விரதம் பலன்கள்
👍 ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும்.
👍 மேலும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
👍 துன்பங்கள் நீங்கி சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
👍 பெருமாளின் அருள் கிடைக்கும்.
👍 வைகுண்ட பதவி கிடைக்கும்.
👍 மகா விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ஏகாதசி அன்று செய்ய கூடாதவை
👍 ஏகாதசியன்று துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது.
👍 வீட்டில் இறந்தவருக்கு ஏகாதசி திதியில் நினைவு நாள் வந்தால், அன்றைய தினம் திதி செய்யக்கூடாது.
👍 ஏகாதசியன்று உண்ணாமல் விரதம் இருப்பவர்களை கேலி செய்யக்கூடாது.
👍 ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று பகலில் தூங்கக்கூடாது.
ஏகாதசி திதியில் என்னென்ன செய்யலாம்
👍 ஏகாதசி திதி நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை தியானிப்பது சிறப்பான பலனைத் தரும்.
👍 ஏகாதசி அன்று திருமணம் செய்யலாம்.
👍 மங்களகரமான சடங்குகள் செய்யலாம்.
👍 ஏகாதசி அன்று வீடு குடிபோகலாம்.
👍 குழந்தைகளுக்கு மொட்டையடிக்கலாம்.
👍 ஆபரணங்கள் வாங்கலாம்.
👍 ஆன்மீக செயல்களில் ஈடுபடலாம்.
ஏகாதசி திதிக்கான தெய்வம்
👍 வளர்பிறை ஏகாதசி திதி தெய்வம் : பராசக்தி, மஹா விஷ்ணு.
👍 தேய்பிறை ஏகாதசி திதி தெய்வம் : மஹா ருத்திரர், மஹா விஷ்ணு.
ஏகாதசி விரதம் 2025 தேதிகள்
ஜனவரி வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025🌷 நாள் : 10/01/2025 (மார்கழி 26, குரோதி)
🌹 கிழமை: வெள்ளிக்கிழமை
🌻 திதி : பவுஷா புத்ராடா ஏகாதசி
ஜனவரி தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 25/01/2025 (தை 12, குரோதி)
🌹 கிழமை: சனிக்கிழமை
🌻 திதி : சட்டில ஏகாதசி
பிப்ரவரி வளர்பிறை ஏகாதசி விரதம் 2025 திதி
🌷 நாள் : 08/02/2025 (தை 26, குரோதி)
🌹 கிழமை: சனிக்கிழமை
🌻 திதி : ஜெய ஏகாதசி
தேய்பிறை பிப்ரவரி ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 24/02/2025 (மாசி 12, குரோதி)
🌹 கிழமை: திங்கட்கிழமை
🌻 திதி : விஜய ஏகாதசி
மார்ச் வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 10/03/2025 (மாசி 26, குரோதி)
🌹 கிழமை: திங்கட்கிழமை
🌻 திதி : ஆமாலக்கி ஏகாதசி
மார்ச் தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 25/03/2025 (பங்குனி 11, குரோதி)
🌹 கிழமை: செவ்வாய்க்கிழமை
🌻 திதி : பாப்மச்னி ஏகாதசி
வளர்பிறை ஏப்ரல் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 08/04/2025 (பங்குனி 25, குரோதி)
🌹 கிழமை: செவ்வாய்க்கிழமை
🌻 திதி : கமாடா ஏகாதசி
தேய்பிறை ஏப்ரல் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 24/04/2025 (சித்திரை 11, விசுவாசுவ)
🌹 கிழமை: வியாழக்கிழமை
🌻 திதி : வருதிணி ஏகாதசி
மே வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 08/05/2025 (சித்திரை 25, விசுவாசுவ)
🌹 கிழமை: வியாழக்கிழமை
🌻 திதி : மோகினி ஏகாதசி
மே தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 23/05/2025 (வைகாசி 9, விசுவாசுவ)
🌹 கிழமை: வெள்ளிக்கிழமை
🌻 திதி : அபரா ஏகாதசி
ஜூன் ஏகாதசி விரத திதி 2025 வளர்பிறை
🌷 நாள் : 06/06/2025 (வைகாசி 23, விசுவாசுவ)
🌹 கிழமை: வெள்ளிக்கிழமை
🌻 திதி : நிர்ஜலா ஏகாதசி
தேய்பிறை ஜூன் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 21/06/2025 (ஆனி 7, விசுவாசுவ)
🌹 கிழமை: சனிக்கிழமை
🌻 திதி : யோகினி ஏகாதசி
வளர்பிறை ஜூலை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 06/07/2025 (ஆனி 22, விசுவாசுவ)
🌹 கிழமை: ஞாயிற்றுக்கிழமை
🌻 திதி : தேவ் ஷாயானி ஏகாதசி
ஜூலை தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 21/07/2025 (ஆடி 6, விசுவாசுவ)
🌹 கிழமை: திங்கட்கிழமை
🌻 திதி : கமிகா ஏகாதசி
ஆகஸ்ட் வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 05/08/2025 (ஆடி 21, விசுவாசுவ)
🌹 கிழமை: செவ்வாய்க்கிழமை
🌻 திதி : சரவண புத்ரத ஏகாதசி
தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025 ஆகஸ்ட்
🌷 நாள் : 19/08/2025 (ஆவணி 3, விசுவாசுவ)
🌹 கிழமை: செவ்வாய்க்கிழமை
🌻 திதி : அஜா ஏகாதசி
வளர்பிறை செப்டம்பர் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 03/09/2025 (ஆவணி 18, விசுவாசுவ)
🌹 கிழமை: புதன்கிழமை
🌻 திதி : பார்ஸ்வ ஏகாதசி
தேய்பிறை செப்டம்பர் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 17/09/2025 (புரட்டாசி 1, விசுவாசுவ)
🌹 கிழமை: புதன்கிழமை
🌻 திதி : இந்திர ஏகாதசி
அக்டோபர் வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 03/10/2025 (புரட்டாசி 17, விசுவாசுவ)
🌹 கிழமை: வெள்ளிக்கிழமை
🌻 திதி : பாபன்குஷா ஏகாதசி
அக்டோபர் தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 17/10/2025 (ஐப்பசி 1, விசுவாசுவ)
🌹 கிழமை: வெள்ளிக்கிழமை
🌻 திதி : ராம ஏகாதசி
நவம்பர் வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 02/11/2025 (ஐப்பசி 17, விசுவாசுவ)
🌹 கிழமை: ஞாயிற்றுக்கிழமை
🌻 திதி : தேவதான ஏகாதசி
நவம்பர் தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 15/11/2025 (ஐப்பசி 30, விசுவாசுவ)
🌹 கிழமை: சனிக்கிழமை
🌻 திதி : உட்பனா ஏகாதசி
வளர்பிறை டிசம்பர் ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 01/12/2025 (கார்த்திகை 16, விசுவாசுவ)
🌹 கிழமை: திங்கட்கிழமை
🌻 திதி : மோக்ஷா ஏகாதசி
டிசம்பர் தேய்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 15/12/2025 (கார்த்திகை 30, விசுவாசுவ)
🌹 கிழமை: திங்கட்கிழமை
🌻 திதி : சப்லா ஏகாதசி
டிசம்பர் வளர்பிறை ஏகாதசி விரத திதி 2025
🌷 நாள் : 30/12/2025 (மார்கழி 15, விசுவாசுவ)
🌹 கிழமை: செவ்வாய்க்கிழமை
🌻 திதி : பவுஷா புத்ராடா ஏகாதசி
முடிவுரை
அன்பார்ந்த பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள வளர்பிறை ஏகாதசி நாட்கள் 2025, தேய்பிறை ஏகாதசி விரத தேதிகள் 2025 தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். ஏகாதசி திதியில் வரன் பார்க்கலாமா? என்று நினைப்பவர்களா நீங்கள்? இந்த 2025 ஏகாதசி திதிகளில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம் எனவே, உங்கள் மனதுக்குப் பிடித்தமான வரன் கிடைக்க நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!