தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025
சர்ப்ப கிரகங்களான ராகு-கேது பகவான் இந்த ஆண்டு தனுசு ராசிக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் குறையாது. குடிசையில் பிறந்தாலும் வானளாவிய லட்சியங்களுடன் வாழும் தனுசு ராசி அன்பர்களே!! நல்ல நேரம் பிறந்தாச்சு!! ஆனால் இன்னும் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவில்லையா? உங்கள் கலாச்சாரம், ஆர்வங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணையை நீங்கள் தேடுகிறீர்களா? உங்கள் தேடலுக்கு பொருத்தமானவரை காண நித்ரா மணமாலை! ஒரு சிறந்த தளமாகும்.
ராகு-கேது பார்வை
💖 பொறுமையும், நிதானமும் கொண்டு சிந்தித்துச் செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
💖 ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். சுயநலமான சிந்தனைகள் மேம்படும். தனக்கான ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
💖 ராசிக்கு 10ம் வீட்டில் கேது அமர்வதால் பூர்வீக சொத்து தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். தூரத்து உறவினர்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். செல்ல பிராணிகளிடத்தில் கவனம் வேண்டும். நிலையான சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
💖 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழக்கவழக்கங்களில் கவனம் வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பொருளாதாரம்
💖 சிந்தனையின் போக்கில் ஆடம்பரம் வெளிப்படும். புதிய வீடுகள் வாங்குவது, வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணங்கள் அதிகரிக்கும்.கையிருப்புகளுக்கு தகுந்த விதத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தனவரவுகள் மத்திமமாக இருக்கும். தொழில் சார்ந்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். கடன்களின் ஒரு பகுதியை நிறைவு செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
💖 உத்தியோகப் பணிகளில் பொறுப்புகளும், இலக்குகளும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும்.
வியாபாரிகள்
💖 வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடையை விரிவுப்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாட்களிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உணவு, மற்றும் அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ரசாயன வேலைகளில் லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்
💖 அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். திடீர் பயணங்களால் உடலில் சோர்வு உண்டாகும். ஆன்மிக கருத்துகளில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைஞர்கள்
💖 கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்க உணர்வுகளும், கவலைகளும் குறையும். எதிராக செயல்பட்டவர்களை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். விமர்சன கருத்துகள் படிப்படியாக மறையும். படைப்புக்கான மதிப்பு காலத்திற்கு தகுந்த விதத்தில் கிடைக்கும்.
பெண்கள்
💖 பெண்கள், உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான சூழல் அமையும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தூர தேச பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.
மாணவர்கள்
💖 மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நன்மையை ஏற்படுத்தும். உயர் கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். தொழில்நுட்பத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். விருப்பமான துறைகளில் படிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
நன்மைகள்
💖 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகமும், பழமை சார்ந்த தேடல்களும் உண்டாகும்.
தீமைகள்
💖 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு தொடர்பான துறைகளில் கவனத்துடன் இருக்கவும்.
வழிபாடு
💖 திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வர செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
💖 புதன் கிழமைதோறும் அருகில் உள்ள வராகப் பகவானை வழிபடுவதால் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறும். தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு இன்னும் சரியான வரன் அமையவில்லையா? கவலையை விடுங்கள். நித்ரா மணமாலையில் எண்ணற்ற தம்பதிகள் அன்பு, தோழமை மற்றும் மகிழ்ச்சியைக் கண்டுள்ளனர். எனவே, ஏன் காத்திருக்க வேண்டும்? நித்ரா மணமாலையில் இப்போதே பதிவு செய்து, உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி முதல் படியை எடுங்கள். உங்கள் ஆத்ம துணை ஒரு கிளிக் தூரத்தில் இருக்கலாம். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் - இப்போதே பதிவு செய்து, உங்கள் சரியான பொருத்தத்திற்கான பயணத்தைத் தொடங்குங்கள்!