சதுர்த்தி திதி தேதிகள்
முன்னுரை
💫 சந்திரமானம் என்னும் கால கணிப்பின்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது. அதாவது தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியானது சங்கடஹர சதுர்த்தி ஆகும். இந்நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து பூஜை செய்வர். நாம் இந்தப் பதிவில் 2025 சதுர்த்தி நாட்கள் பற்றி தெரிந்து கொள்வோம். திருமணம் ஆகவில்லை என சங்கடமா? இனி அந்த சங்கடமே வேண்டாம்! நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்து, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப்பருமானுக்கு விரதம் இருந்து வழிப்பட்டு வந்தால் கூடிய விரைவில் திருமணம் கைக்கூடும். நேரத்தை வீணாக்காதீர்கள்!! உடனே வரன் பதிவு செய்யுங்கள்!!
சதுர்த்தி திதி விரதம் நாட்கள் 2025
💫 சங்கட சதுர்த்தி என்பது சங்கஷ்டி சதுர்த்தி என்றும் கூறப்படுகிறது. இது வாழ்வில் வரும் தடைகளையெல்லாம் நீக்கும் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மரியாதைக்குரிய இந்து அனுசரிப்பு தினமாகும். சங்கட சதுர்த்தியானது இந்து கலாச்சாரத்தில் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது மற்றும் மிகுந்த பக்தியுடனும் ஆர்வத்துடனும் அனுசரிக்கப்படும் நாளாகும்.
💫 சங்கடம் என்பது துன்பம் என்றும், ஹர என்பது ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை என்ற பொருளாகும். விநாயகரை வழிபடுவதின் மூலம் ஒருவர் துன்பத்திலிருந்து விடுபடமுடியும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக கூறப்படுகிறது.
💫 செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் முக்கியத்துவத்தினைக் கொண்டது. செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை அங்கராகி சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகிறது. மஹராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும் மக்கள் அங்கராகி சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடபடுகிறார்கள்.
💫 விநாயகரின் பிறந்தநாளாக கொண்டப்படும் தினம் விநாயகர் சதுர்த்தி ஆகும். விநாயகர் சதுர்த்தி ஓவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்ப்பிறை சதுர்த்தியில் வருகிறது. விநாயகர் சதுர்த்தியை தவிர மற்ற அனைத்து சங்கடஹர சதுர்த்திகளும் தேய்பிறையில் வருகிறது.
💫 விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்படுகிறார்கள்.
💫 சங்கடஹர சதுர்தியில் விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி விநாயகப்பெருமானை வணங்கவேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோம்பு இருந்து மாலையில் விநாயகரை பூஜை செய்து வணங்கி பின்பு சந்திரனை வணங்கவேண்டும். விநாயகருக்கு படைத்த உணவை உண்டு, விரதத்தை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்தால் விரதம் மேற்கொள்பவரின் சகல சங்கடங்களையும் விநாயகர் தீர்த்துவைப்பார் என நம்பப்படுகிறது.
சதுர்த்தி விரத தேதிகள் 2025
ஜனவரி 2025 வளர்பிறை சதுர்த்தி🌷 தேதி : 03.01.2025 மார்கழி 19, குரோதி 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி ஜனவரி 2025
🌷 தேதி : 17.01.2025 தை 4, குரோதி 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : தேய்பிறை
பிப்ரவரி சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 01.02.2025 தை 19, குரோதி 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : வளர்பிறை சதுர்த்தி 2025
தேய்பிறை சதுர்த்தி 2025 பிப்ரவரி
🌷 தேதி : 15.02.2025 மாசி 3, குரோதி 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : தேய்பிறை
மார்ச் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 13.03.2025 மாசி 20, குரோதி 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி நாட்கள் 2025 மார்ச்
🌷 தேதி : 28.03.2025 பங்குனி 14, குரோதி 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : தேய்பிறை
ஏப்ரல் வளர்பிறை சதுர்த்தி தேதி 2025
🌷 தேதி : 11.04.2025 பங்குனி 28, குரோதி 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி தேதி 2025 ஏப்ரல்
🌷 தேதி : 27.04.2025 சித்திரை 14, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : தேய்பிறை
மே வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 11.05.2025 சித்திரை 28, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி தேதி 2025 மே
🌷 தேதி : 26.05.2025 வைகாசி 12, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : தேய்பிறை
ஜூன் வளர்பிறை சதுர்த்தி தேதிகள் 2025
🌷 தேதி : 9.06.2025 வைகாசி 26, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : வளர்பிறை
ஜூன் தேய்பிறை சதுர்த்தி தேதிகள் 2025
🌷 தேதி : 25.06.2025 ஆனி 11, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : புதன்
🌻 பிறை : தேய்பிறை
2025 ஜூலை வளர்பிறை சதுர்த்தி நாட்கள்
🌷 தேதி : 9.07.2025 ஆனி 25, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : புதன்
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி நாட்கள் ஜூலை 2025
🌷 தேதி : 24.07.2025 ஆடி 9, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : தேய்பிறை
ஆகஸ்ட் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 7.08.2025 ஆடி 23, விசுவாசுவ 🌷 *நாக சதுர்த்தி*
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
ஆகஸ்ட் தேய்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 22.08.2025 ஆவணி 12, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : தேய்பிறை
செப்டம்பர் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 6.09.2025 ஆவணி 21, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி நாட்கள் 2025 செப்டம்பர்
🌷 தேதி : 20.09.2025 புரட்டாசி 4, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : தேய்பிறை
அக்டோபர் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 6.10.2025 புரட்டாசி 20, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : வளர்பிறை
அக்டோபர் தேய்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 20.10.2025 ஐப்பசி 4, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : தேய்பிறை
நவம்பர் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 04.11.2025 ஐப்பசி 19, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சதுர்த்தி நாட்கள் நவம்பர் 2025
🌷 தேதி : 18.11.2025 கார்த்திகை 3, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : தேய்பிறை
டிசம்பர் வளர்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 4.12.2025 கார்த்திகை 19, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
டிசம்பர் தேய்பிறை சதுர்த்தி நாட்கள் 2025
🌷 தேதி : 18.12.2025 மார்கழி 10, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : தேய்பிறை
முடிவுரை
💫 மேலே கொடுக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான சங்கடஹர சதுர்த்தி தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். முழு முதற்கடவுளான விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இந்த நல்ல நாளின் பிள்ளையாருக்கு விரதத்தினை கடைப்பிடித்து வந்தால் திருமணத் தடை நீங்கி, திருமணம் நடைபெறும். எனவே, நீங்கள் திருமணம் செய்ய நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்யுங்கள்!! உங்கள் வருங்கால துணையைத் தேர்ந்தெடுங்கள்!!