ஆயில்யம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
🥳 திருமணப் பேச்சு வார்த்தை எடுத்ததும், திருமணத்திற்கான ஆண் அல்லது பெண்ணுக்கு சேரும் ராசி, நட்சத்திரம் என்று அவர்களின் ஜாதகத்திலேயே எழுதிக் கொடுத்து அனுப்பக்கூடிய காலமாக தற்போது உள்ளது.திருமண தம்பதிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம். அந்த வகையில், நம் முன்னோர்கள் காலத்திலிந்தே ஆயில்யம் நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்பவர்களின் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு ஆயில்யம் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களையும், பெண் ஆயில்யம் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவரா? இன்னும் சரியான வரன் அமையவில்லையா? கவலைய விடுங்க! நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்க! சீக்கிரம் கல்யாணத்தை முடியுங்க!!
ஆயில்யம் நட்சத்திரத்தின் பெருமை:🥳 இந்திய வானியல் மற்றும் ஜோதிடத்தில் இராசியின் இருபத்தேழு நட்சத்திர-கோணப் பிரிவுகளில் 9-வது பிரிவாக ஆயில்யம் உள்ளது. இது கடக ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் ஒன்றாகும். இந்திய பஞ்சாங்க அமைப்பில், சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால் ஆயில்ய நட்சத்திரத்தின் கோணப் பிரிவிற்குள் இருக்கும் காலம் ஆயில்யம் நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய ஜோதிடத்தின்படி, இந்த காலகட்டத்தில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜென்ம நட்சத்திரம்" ஆயில்யம் ஆகும்.
🥳 ஆயில்யம் நட்சத்திரமானது, இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது, தன் அண்ணனை பிரியாமல் அவருடனே சென்று, அவருக்குப் பணிவிடை செய்த லட்சுமணன் பிறந்த நட்சத்திரமாகும். பொதுவாகவே, இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர பாசம் கொண்டவர்களாக விளங்குவார்கள். ஆயில்ய நட்சத்திரம், சந்திரனுக்கு உரிய கடகம் ராசியில் அமைந்துள்ளது மற்றும் புதனின் ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இந்நட்சத்திரக்காரர்கள் சந்திரனுக்கு உரிய படைப்பாற்றலையும், புதனுக்குரிய சாதுர்யத்தையும் கொண்டு விளங்குவார்கள்.
🥳 ஆயில்யம் பெண்ணை திருமணம் செய்யலாமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கக் கூடிய ஒன்றே. திருமணம் என்றால் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருக்கும் சுகபோகங்களைத் தாண்டி, வீட்டில் இருக்கும் இன்ப துன்பங்களையும் சமாளித்து சமுதாயத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தானே.
🥳 கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழாமல் அருகருகே வாழும் எண்ணம் கொண்டது தான் ஆயில்யம். ஆயில்யம் நட்சத்திரப் பெண், தன்னை விட்டுக்கொடுக்காத கணவனிடம் அதிக அன்பு செலுத்தக்கூடியவளாக இருப்பாள். எனவே ஆயில்யம் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதில் தவறில்லை. எந்த பாதிப்பும் இல்லை.
🥳 திருமண பொருத்தத்தைப் பார்க்கும்போது, ஜாதகத்தின் பிற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதகத்தின் லக்கினம், ராசி, நட்சத்திரம், திசை, கிரகங்கள் ஆகியவற்றின் நிலையை ஆராய்ந்து, பொருத்தத்தை முடிவு செய்ய வேண்டும்.கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள்:
🥳 ஆண் நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரமாக இருப்பின், பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள் அஸ்தம், அனுஷம், பூசம் ஆகும்.
🥳 பெண் நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரமாக இருப்பின், பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள் சித்திரை, அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் ஆகும்.
🥳 பூரம், ஹஸ்தம், சுவாதி, அவிட்டம் கும்ப ராசி, சதயம், பூரட்டாதி கும்ப ராசிஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்களில் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தால் நன்று, மேலும் இந்த நட்சத்திரக்காரர்களுடன் கூட்டுறவைத் தவிர்க்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்/பெண்களின் திருமண வாழ்க்கை:💚 மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
💚 கணவன்-மனைவி இடையே நல்ல ஒற்றுமை
💚 குழந்தை பாக்கியம்
💚 செல்வம் செழிப்பு
ஆயில்யம் நட்சத்திர பரிகாரம்:
🥳 திருமணத்தடை, நிரந்தர வேலை கிடைக்கவில்லை, வாழ்வில் பிரச்சனை என புலம்பும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், நாகூர் நாகநாதர் ஆலயத்திற்குச் சென்று வரலாம். அதேபோல், ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் மகாவிஷ்ணுவின் ஆலயமான ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சயன கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் விரைவாக திருமணம் கைகூடும்.
🥳 வேலை மாற்றம், வீடு மாற்றம் என அடிக்கடி நிகழும் இடமாற்றங்கள் நடப்பவர்கள் இக்கோயில்களில் வணங்கி வந்தால் வேலையும், இருப்பிடமும் நிரந்தர தன்மை ஏற்படும்.
🥳 ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் சந்திர சாந்தி ஹோமம், புத சாந்தி ஹோமம் செய்து தோஷம் நீங்கப் பலன் பெறுவார்கள். கோயில்களுக்குச் செல்லும்போது செவ்வரளிப் பூக்களால் இறைவனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
🥳 கும்பகோணம்-பூம்புகார் சாலையில் உள்ள திருத்தேவன்குடியில் அமைந்துள்ள ஸ்ரீகற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்திருத்தலம் ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு வந்து இறைவனை வழிபட்டு செல்ல வேண்டும். இந்நட்சத்திரகாரர்கள் ஆயில்யம் நட்சத்திர தினத்திலோ அல்லது தேய்பிறை அஷ்டமி நாளிலோ இறைவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து வர பல நன்மைகள் வந்து சேரும்.
🥳 இத்திருத்தலம் ஆயில்யம் நட்சத்திரங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு வந்து இறைவனை வழிபட வேண்டும். இந்த நட்சத்திரக்காரர்கள் ஆயில்யம் நட்சத்திரத்திலோ அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்திலோ நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் பல நன்மைகள் உண்டாகும். இது ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கும் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த பரிகாரத் தலமாககருதப்படுகிறது.
💚 தெய்வம் - மகாவிஷ்ணு
💚 அதிதேவதை - ஆதிசேஷன் - நாகம்
💚 மிருகம்- பெண் பூனை
💚 பறவை - கிச்சிலி
💚 மலர் - வெண்காந்தள் மலர்
💚 விருட்சம் - புன்னை மரம் (கோடைகாலத்திலும் இலைகளை உதிராமல் நிழல் தரும் மரம். முடிந்தவரை எங்கெல்லாம் புன்னை மரத்தின் செடியை நட்டு வளர்க்க முடியுமோ வளர்த்து வாருங்கள், வாழ்க்கையில் நன்மைகள் பெருகும்).
🥳 அன்பார்ந்த வாசகர்களே! இந்த ஆயில்யம் நட்சத்திர தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரன் அமைவது கஷ்டம்-ன்னு அதற்கான முயற்ச்சிகளைக் கூட இன்னும் எடுக்காமல் மன வருத்தத்தில் புலம்பிக் கொண்டுள்ளீர்களா? இனிமே, இந்த வருத்தமே வேண்டாம்! நித்ரா மேட்ரிமோனியில் உடனே வரன் பதிவு செய்யுங்கள். உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு பொருத்தமான வரனை உங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்க தயாராகுங்கள்!