💫ஆயிரம் காலத்து பயிர்.. திருமணத்திற்கு தேதி குறிப்பது எப்படி? சில டிப்ஸ்..!!💫
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணம்! கணவன்-மனைவியின் அற்புதமான உறவின் தொடக்கமான திருமணத்திற்கு நாள் குறிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.திருமண நாள் நிச்சயிக்கும் முறை...!!
திருமணம் செய்வதற்கான நோக்கம் உங்களுக்கு தெரியுமா?
💕 திருமணம் செய்வதற்கான நோக்கம் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கிடையில் காதலும், அன்பும், அக்கறையும், நமக்காக ஒரு துணை இருக்கின்றார் என்ற எண்ணமும் தோன்றவே திருமணங்கள் நடைபெறுகிறது.💕 திருமணம் செய்வதற்கு முதலில் நல்ல நாள் குறிப்பது முக்கியம்.
💕 நெற்பயிரை விதைப்பதற்கு நல்ல நாள் பார்ப்பது போல், திருமணம் என்ற ஆயிரம் காலத்து பயிரை விளைவிக்க கவனமாக சுபமுகூர்த்தத்தை நிச்சயித்து கொள்ள வேண்டும்.
திருமண நாளை எப்படி நிச்சயிக்க வேண்டும்?
💕 திருமணம் மல மாதத்தில் இடம் பெறக்கூடாது. மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஒரே மாதத்தில் இடம் பெறுவது ஆகும்.💕 ஆனி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
💕 சுக்கில பட்சம் தவிர கிருஷ்ண பட்ச காலங்களில் திருமணம் செய்யக்கூடாது.
💕 புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப கிழமைகளில் திருமணம் செய்வது சிறப்பு.
💕 ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்னங்களில் தான் திருமணம் நடத்த வேண்டும். இதர லக்னங்களில் நடத்தக்கூடாது.
💕 துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளில் திருமணம் நடைபெறக்கூடாது.
💕 திருமணம் ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் தவிர இதர நட்சத்திரங்களில் நடத்தக்கூடாது.
💕 திருமணம் அக்னி நட்சத்திரம், மிருத்யு பஞ்சகம், கசர யோகங்கள் போன்ற அசுப காலங்களில் நடைபெறக்கூடாது.
💕 திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்னத்திற்கும், மணமக்கள் ஜென்ம ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெறக்கூடாது.
💕 மணமக்கள் பிறந்த தேதி அல்லது கிழமைகளில் திருமணம் நடைபெறக்கூடாது.
💕 இப்படி பார்த்து பார்த்து திருமண நாளை குறித்து திருமணம் செய்யுங்கள்.. வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் செழிக்கட்டும்.
திருமண நாள் குறிப்பதற்கு டிப்ஸ் சொல்வது சரிதான். ஆனால் இன்னும் நான் வரன் தேடி கொண்டு இருக்கின்றேன்.. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று நினைப்பவர்களுக்கு.. தமிழ்நாட்டில் சிறப்பாக சேவை ஆற்றி கொண்டிருக்கும் நித்ரா மணமாலை செயலியில் உங்கள் profile-யை இலவசமாக பதிவு செய்து உங்களுக்கு ஏற்ற வரனை தேர்ந்தெடுங்கள். மறக்காமல் திருமண நாள் குறிக்கும் முன், மேற்கூறியதை நினைவில் வைத்து திருமண நாளை முடிவு செய்யுங்கள்.