அஷ்டமி, நவமி என்றால் என்ன?
முன்னுரை:
💑 நாம் எதைச் செய்தாலும் அதை நல்ல நேரத்தில், நல்ல நாளில் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல காரியங்கள் செய்யும்பொழுது அந்த நாள் நல்ல நாளா என்று பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதில் அஷ்டமி, நவமி, பிரதமை, அமாவாசை போன்ற சில நாட்களை சுபகாரியங்கள் செய்யக்கூடாத நாட்கள் என்று பலர் கூறுகிறார்கள். சுப நாட்கள் பார்த்து சுப காரியங்கள் செய்ய!! நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! திருமணம் என்னும் முக்கிய சுபகாரியத்தை நடத்துங்கள்!! அஷ்டமி, நவமி ஆகியன நல்ல நாட்களே என்பதை இங்கே பார்ப்போம்.
அஷ்டமி, நவமி வரலாறு:
💑 அஷ்டமியும் நவமியும் கெட்ட நாட்கள் என்பதற்கு ஒரு கதையும் உண்டு. ஒருமுறை அனைத்து திதிகளும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டன. "மற்ற திதிகள் எல்லாம் மாதத்தில் இரண்டு நாட்கள் வரும். ஆனால், அமாவாசை மற்றும் பெளர்ணமியானது மாதத்தில் ஒரு நாள்தான் வரும்" என்று கவலையுடன் சொன்னார்கள். அதனைக் கேட்ட சிவபெருமான், "ஒவ்வொரு திதிக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு". இதற்குக் காரணம் உங்கள் மகிமையை நீ அறியாததே" என்று கூறி, ஒவ்வொரு திதியின் சிறப்புகளையும் விளக்கினார்.
பெருமாள் கொடுத்த வரம்:
💑 இதை அஷ்டமியும் நவமியும் மட்டும் கண்டுகொள்ளாமல் தனியே பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், "என்னை மதிக்காத உன்னை உலகமே ஒதுக்கித் தள்ளும்" என்று சாபமிட்டார். தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு சிவபெருமானிடம் தீர்வு தேடினார்கள். சிவனும் மனம் இரங்கி, திருமாலிடம் சென்று தீர்வு கேட்குமாறு பணித்தார். இதனால் அஷ்டமியும் நவமியும் நடந்ததை வைகுண்டத்தில் இருக்கும் திருமாலிடம் கூறி வழி கேட்டனர். "கவலைப்படாதே, நான் எடுக்கப்போகும் அவதாரங்களில் உலகம் உன்னைக் கொண்டாடும்" என்றார்.
💑 அதன்படி ராமர் நவமியிலும், கிருஷ்ணன் அஷ்டமி திதியிலும் அவதாரம் எடுத்தனர். பெருமாள் இந்த நாட்களை ராமநவமி, கோகுலாஷ்டமி ஆகிய நாட்களை வழிபாட்டிற்கு உகந்ததாக ஆக்கினார். ராமரையும், கிருஷ்ணரையும் வழிபடும் போது, அவர்கள் அவதரித்த அஷ்டமி, நவமி ஆகியவை கெட்ட நாட்களாக இருக்க முடியாது. எனவே, அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் சுப காரியங்களை செய்யலாம்.
அஷ்டமி திதியில் என்ன செய்ய வேண்டும்??
💑 இந்த திதி யுத்தம், தன்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், அபரணம், கிரையம் மற்றும் கோவில் பூஜைக்கு ஏற்றது.
நவமி திதியில் என்ன செய்ய வேண்டும்??
💑 நவமி திதியின் தேவி, அம்பிகை ஆவார். இந்நாளில் எதிரிகளை வெல்லலாம், தெய்வங்களுக்கு யாகம் செய்யலாம், காவல் தெய்வங்களை வழிபடலாம், எல்லை தெய்வங்களை வழிபடலாம். புதிய வேலைகள் செய்யலாம், சுபகாரியங்கள் செய்யலாம், நகைகள், ஆடைகள் வாங்கலாம், தர்மம் செய்யலாம்.
💑 எனவே அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களானது நல்ல நாட்களே ஆகும்.
முடிவுரை:
💑 நவமி மற்றும் அஷ்டமி திதிகளில் சுப காரியங்களை (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவை) தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த திதிகள் தெய்வீக செயல்களுக்கு ஏற்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அஷ்டமி மற்றும் நவமி பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். மேலும், ஆன்மிகம் சார்ந்த தகவல்களுக்கு நித்ரா காலண்டர் செயலியை பதிவேற்றம் செய்து பயன் பெறுங்கள். இந்த திருமண பந்தத்தில் தான் ஒருவரின் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே திருமணம் நடக்கவில்லை என கவலை வேண்டாம். திருமணம் செய்ய நமது நித்ரா மணமாலை மூலம் இலவசமாக வரன் பதிவு செய்து வாழ்வில் இன்பம் புரியுங்கள்!!