Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

அட்சய திருதியை 2024 எப்போது?

💫 இந்தியாவில் அட்சய திருதியை ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது, எனவே இந்த புனித நாளில் நாம் செய்யும் அனைத்து வகையான நற்செயல்களும் சிறப்பாக நடக்கும். மேலும் பொன்நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டிற்கு செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படும் இந்த நாள் இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படும் புனித நாள்.

💫 இந்தப் பதிவில் 2024ஆம் ஆண்டு அக்ஷய திருதியை எப்போது என்று பார்க்கலாம் வாருங்கள். பெற்றோர்கள் அட்சய திருதியைக்கு நகை எடுப்பதே பெரும்பாலும் தங்கள் மகன், மகளின் திருமணத்திற்காகவே இருக்கும். நகை எடுப்பது எவ்வளது முக்கியமோ, அது போன்று அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதும் முக்கியம். நல்ல வரன் கிடைக்கவில்லையா? ஒரே ஒரு முறை நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்து பாருங்கள்! பெண்களுக்கு முற்றிலும் இலவசம்! உங்கள் வீட்டு மணமகன்/மணமகளை நீங்களே தேர்வு செய்யலாம்.

அக்ஷய திரிதியின் வரலாறு:

💫 புராணங்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் படி, இந்த நாள் பல முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கிறது.

💫 விநாயகப் பெருமானும், வேத வியாசரும் மகாபாரதக் காவியத்தை எழுதியது இந்நாளில்தான்.

💫 இந்த நாள் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

💫 அன்னபூரணி தேவி இந்த நாளில் பிறந்தார்.

💫 இந்த நாளில், கிருஷ்ணர் தனது உதவிக்கு வந்த தனது ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வத்தையும் பண ஆதாயங்களையும் வழங்கினார்.

💫 மகாபாரதத்தின் படி, இந்த நாளில் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு பசியடையச் செய்யாத அளவற்ற உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் அக்‌ஷய பாத்திரத்தை அவர்களுக்கு அருளினார்.

💫 இந்த நாளில் கங்கை நதி வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியது.

💫 இந்த நாளில்தான் குபேரர் லட்சுமி தேவியை வழிபட்டார், இதனால் தேவியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.

💫 சமண மதத்தில், இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை 2024 தேதி:

💫 தங்கம் வாங்க ஒரு நல்ல நாள் என்றால் அது அட்சய திருதியை தான். அட்சய திருதியை என்பது சித்திரை மாதம் கழிந்து முதல் வளர்பிறை திருதியை அட்ஷய திருதியை என்று கூறப்படும். அதாவது, அள்ளிக்கொடுக்கும் வளங்கள் மற்றும் எல்லா நலன்களை பெற்று தருவது இந்த அட்சய திருதியை என்பார்கள்.

💫 அட்சய திருதியை தினத்தில் ஏதாவது பொருட்கள் வாங்கினால் பல மடங்கு வந்து சேரும் என்பதே ஐதீகம். அதனாலேயே தான் மக்கள் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குகின்றனர். 2024 ஆம் ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (5/10/2024) வருகிறது. 2024 ஆம் ஆண்டு 131 ஆம் நாள் அக்ஷய திருதியை ஆகும்.

அட்சய திருதியை அன்று வாங்க வேண்டியவை:

💫 தங்கம்தான் வாங்க வேண்டும், வாங்கினால்தான் தங்கம் நிலைத்து நிற்கும் என்பார்கள். தங்கம் மட்டுமல்ல எதை வாங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் எல்லோரும் அத்தகைய விலையுயர்ந்த பொருளை வாங்க முடியாது என்று மனம் தளராதீர்கள். உப்பு, அரிசி, தேவையான உடைகள், சிறிய பாத்திரம் என எது வேண்டுமானாலும் வாங்கலாம்.

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை:

💫 2024 அக்ஷய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது.

💫 அன்னதானம் வழங்குவதும் சிறப்பு.

💫 மற்றவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களையும் கொடுங்கள். எனவே, அட்சய திருதியை செல்வம் குறையாமல் தரும் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கருதப்படுகிறது.

💫 பணமாக செலுத்த வேண்டாம். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்குவது நல்லது.

💫 2024 இல் அக்ஷய திரிதியா நாளில் சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் லட்சுமி தேவி பூமியில் இறங்கி வருவதாக ஐதீகம்.

💫 இந்த நாளில் பசு, யானை போன்ற விலங்குகளுக்கு தீவனம் வைப்பதும், மரங்களை நடுவதும் புண்ணியம் தரும் செயல்கள்.

முடிவுரை:

💫 அட்சய திருதியை 2024 இந்த நாளில் பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களைச் செய்வது நல்லது. அனைவரும் வசதிற்கேற்ப பொருட்களை வாங்கி பலனடையுங்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணைத் தேடுகிறீர்களா? இந்த அட்சய திரிதியை நன்னாளில் நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள். உங்கள் குலத்திற்கேற்ற வரனைத் தேர்ந்தெடுங்கள்! அப்புறம் என்னங்க, வைகாசியிலேயே திருமணத்தை முடியுங்க!


akshaya thiruthiya 2024


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.