ஆடி மாதத்தில் சுப காரியம் செய்யலாமா?
முன்னுரை:
🌺 ஆடி என்பது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகவே கருதப்படுகிறது. மேலும், ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கமாகவே உள்ளது. சுப மாதத்தில் திருமணம் புரியவும், உங்களது எதிர்கால துணையை காணவும் நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கான துணையை தேர்ந்தெடுங்கள்!! ஆடி மாதத்தில் என்னென்ன செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, அதற்கான காரணங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
🌺 பொதுவாக ஆடி, மார்கழி மாதங்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்தது அல்ல என்பர். ஆனால் அது தவறு ஆகும். ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை தெய்வீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மாதங்கள் எனலாம். ஆகவே, ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்ததே ஆகும்.
திருமணம்:
🌺 ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். ஏனெனில், வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அவர்களின் தாயார் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் பலனளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
🌺 ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேரும் போது கரு உருவாகி அடுத்த பத்தாம் மாதம் சித்திரையில் குழந்தை பிறக்கலாம். சித்திரை மாதமானது அக்னி நட்சத்திம் என்னும் வெப்பமான மாதம் ஆகும். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் பெரியம்மை போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் குழந்தையை எளிதில் தாக்கி உடல் பலவீனமடையும்.
🌺 குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும் என்பதால்தான் 'சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்" என்ற சொல்வழக்கும் உள்ளது. இதன் காரணமாக தான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேருவது நல்லதல்ல என்கின்றனர்.
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
🌺 வருடத்தில் எந்த மாதம் வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.
🌺ஆடி மாதத்தில் பிறந்த பல நபர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
🌺ஒருவரது வாழ்க்கையை பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை.
🌺ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும் என்பது எதுகை, மோனையுடன் அமைந்த பேச்சு வழக்கே ஆகும்.
கிரகப் பிரவேசம்:
🌺 அறிவியல் ரீதியாக ஆடி மாதத்தில் பூமி தெற்கு திசையில் நகரும் போது நிலநடுக்கம் மற்றும் கடல் சீற்றம் ஏற்படுகின்றன. அதிக காற்று மற்றும் கனமழை பெய்யும். எனவேதான், கிரகப் பிரவேசம் முதலிய நிகழ்வுகள் செய்வதில்லை.
🌺 ஆடி மாதம் அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் திருவிழாக்கள், விரத வழிபாடுகள் களைகட்டும்.
முடிவுரை:
🌺 மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆடி மாதத்தில் சுப காரியம் செய்யலாமா? பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். இதுபோன்ற ஆன்மிகம் மற்றும் மாத சிறப்பு பற்றிய தகவல்களுக்கு நித்ரா காலண்டர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!! வாழ்வில் பயன் பெறுங்கள்!!
🌺 திருமணத்தில் இருமனங்கள் ஒன்றிணைந்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் இருவரின் சுபிட்சமான மணவாழ்க்கையானது தேனின் சுவையில் மதி மயங்கி நிற்கும் வண்டினை போன்ற ஒரு இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க கூடியதாகும். இத்தகைய திருமணத்தின் மூலம் கணவன் மனைவி ஆகியோரின் வாழ்க்கையானது நகமும் சதையும் போல வாழ உங்கள் நித்ரா மணமாலையில் பதிவு செய்து உங்களின் வாழ்வை பிரகாசமாக்குங்கள்!!