2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - துலாம்
முன்னுரை
துலாம் ராசியினர் நம்பமுடியாத அளவிற்கு பல நற்குணங்களை கொண்டவர்கள். எல்லா இடங்களிலும் இவர்கள் சமூக அக்கறையுடன் பொறுப்பாக நடந்துகொள்பவர்கள். அதே சமயத்தில் அனைவரிடமும் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகக்கூடியவர். இவ்வளவு அழகிய குணங்களை கொண்ட இவர்களுக்கு வருகின்ற 2025 ஆங்கில புத்தாண்டு எவ்வாறு இருக்கும் என்று இந்த நித்ரா மேட்ரிமோனியில் இணையத்தளத்தில் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
துலாம் புத்தாண்டு ராசிபலன் 2025
உடல் ஆரோக்கியம்
போதுமான தூக்கம், சீரான உணவுப் பழக்கம் மற்றும் இனிப்புகளைத் தவிர்ப்பது ஆகியவை உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கும்.
பெண்கள்
பெண்கள் குடும்ப உறவினர்கள் உடன் கருத்துவேறுபாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்ப நிர்வாகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். தாய்மாமன், தாத்தா, பாட்டி போன்ற தாய்வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டு வேலைகளை எல்லாம் சரியாகப் பார்த்துக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். பண விஷயங்களில் நேர்மையாக இருந்தால் மக்கள் நம்புவார்கள். வேலைகளை செய்யும்போது சிறிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு சற்று கவனம் தேவை. கோபப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்
படிப்பில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும் தெளிவு கிடைக்கும். அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்ல மதிப்பெண்களைப் பெற வழிவகுக்கும். வகுப்பறையில் தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகள் கைகூடும். சில நுட்பமான விஷயங்களையும் கூட எளிதாக புரிந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் உள்ள துலாம் ராசியினர் அவர்களின் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் இப்போது கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. வெகு நாட்களாக இழுபறியாக இருந்துவந்த ஊதிய வரவுகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.
வழிபாடுகள்
குழப்பங்கள் விலக, நன்மைகள் பெருக நடராஜ பெருமாளை வழிபடுவது நல்லது.
முடிவுரை
இத்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த ஆண்டு திருமண யோகம் வந்துவிட்டது வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு நேரத்தில் உங்களுக்கு ஏற்ற பொருத்தமான துணை கிடைப்பது மிகவும் முக்கியம். ஆனால், பொருத்தமான வரன் இன்னும் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். நித்ரா மேட்ரிமோனியை உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. தமிழகத்தில் மிகவும் நம்பகமான திருமண தளங்களில் ஒன்றான நித்ரா மேட்ரிமோனி லட்சக்கணக்கான வரன்கள் உள்ளது. உங்கள் விருப்பத்திற்கேற்ப வரனை தேர்ந்தெடுத்து, உங்கள் வாழ்க்கைத் துணையை எளிதாக கண்டுபிடிக்கலாம்.