2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - ரிஷபம்
முன்னுரை
உங்கள் கனிவான பேச்சுத் திறமையால் மற்றவர்களை கவரும் வண்ணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில் இனி வரப்போகின்ற நாட்களில் பிறக்கப்போகும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! ரிஷப ராசியினரே! உங்களுக்கு இன்னும் திருமண வரன் அமையவில்லையா? இனி கவலை வேண்டாம்! இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன்பதிவு செய்து உங்கள் வாழ்க்கை துணையுடன் இணையுங்கள்.
ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள்
மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆடம்பரப் பொருட்களின் மீதான செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்புகளை மேம்படுத்த முடியும். தாய்மாமன் வழி உறவுகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வும் புதுவிதமான அனுபவமும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கிய செயல்களில் சற்று கவனம் வேண்டும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
கல்வி
2025-ம் ஆண்டு ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல பலன்கள் கிடைக்கும். குருவின் அருள் முழு ஆண்டிற்குமே உங்களுக்கு துணை நிற்கும். இதனால் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இதனாலேயே இந்த ஆண்டு கல்வியில் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் நான்காம் வீட்டில் சனியின் தாக்கமும், பிற்காலத்தில் கேதுவின் தாக்கமும் இருப்பதால் மனம் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டியிருக்கும். அதாவது, நீங்கள் அமைதியாக இருந்து படிப்பில் கவனம் செலுத்தினால், இந்த ஆண்டு மிகச் சிறந்த முடிவுகளை அடைய முடியும்.
தொழில்
பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஊதியம் கிடைப்பதில் ஏற்ற இறக்கம் உண்டாகும். சக ஊழியர்கள் இடத்தில் கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை தரும். வேலைத்தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
பெண்கள்
குடும்பத்தினரிடையே உங்கள் ஆலோசனைக்கு மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். வாகன, சொத்து சேர்க்கை செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். துணையை இழந்தவர்களுக்கு மறுமண பாக்கியம் உண்டாகும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும்.
வழிபாடுகள்
ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் பெருமாளை வழிபாடு செய்து வர குடும்பத்தில் இருந்த வேறுபாடுகளும், புத்திர பாக்கிய தடைகளும் படிப்படியாக குறையும்.
முடிவுரை
2025 ஆம் ஆண்டு, ரிஷப ராசியினருக்கு அன்பு, தொழில், மற்றும் குடும்பத்தில் முன்னேற்றம் தரக்கூடிய வருடமாக இருக்கும். வாழ்க்கையின் முக்கியமான திருமண முடிவுகள் மற்றும் வாழ்வில் நம்பகமான துணையை தேர்வு செய்ய நித்ரா மேட்ரிமோனி உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். உங்கள் கனவு வாழ்க்கையை துவங்க, நித்ரா மேட்ரிமோனியில் சேர்ந்து சரியான துணையை இன்று தேர்வு செய்யுங்கள். 2025 ஆம் ஆண்டை உங்கள் வாழ்வில் சிறந்த ஆண்டாக மாற்றுங்கள்!