2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம்
முன்னுரை
2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பொதுவாக நல்ல பலன்களையே கொண்டு வரும் ஒரு ஆண்டாக இருக்கும். ஆனால் இந்த பதிவில் நாம் 2025 பொதுவான மேஷ ராசி பலன்களைப் பார்ப்போம், மேலும் ஒவ்வொரு நபரின் ஜாதகம், கோச்சாரங்கள் போன்றவற்றில் மற்ற கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை துணையை உங்களுக்கு பிடித்தமான விருப்பங்களுடன் தேட நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்.
ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2025
மேஷ ராசியினர் தங்கள் வலுவான தலைமைப் பண்புகள், பொறுப்புணர்வு மற்றும் அழகிய தோற்றத்திற்காக அறியப்படுகிறார்கள். இந்த குணங்கள் அவர்களை இயற்கையான தலைவர்களாக மாற்றுகின்றன. தனித்துவமான சிந்தனை கொண்டவர்களாகவும், விஷயங்களை தங்கள் முறையில் செய்ய விரும்புவர்களாகவும் மேஷ ராசியினர் திகழ்கிறார்கள். அநீதி இழைக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
மேஷ ராசியினர் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள். இருப்பினும், அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், சில சமயங்களில் பொறுமையிழக்க நேரிடலாம். உங்களுக்கான 2025 ஆங்கில வருட பலன்களை பார்ப்போம்.
உடல் ஆரோக்கியம்
மேஷ ராசியினர் கடந்த ஆண்டுகளில் ஆரோக்கியம் சம்மதமானா விரயங்கள் இந்த ஆண்டு கட்டுப்பாட்டுக்குள் வரும். நேரம் கடந்து உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. துரிதவகை உணவு உண்ணும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் மற்றும் நிதி
வேலை செய்யும் இடங்களில் இருந்துவந்த நெருக்கடி மறையும். சிலருக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான செல்வாக்கு உயரும். தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு சிலருக்கு சாதகமாகும். புதிய பணவரவுகளால் பொருளாதார நிலை சீரடையும். புதிய வேலை தொடர்பான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். உங்களின் திறமைக்கேற்ற புதிய பொறுப்பு மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும்.
பெண்கள்
பெண்கள் எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். மேஷ ராசி பெண்களுக்கு பொன் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கணவர் வழி உறவினர்களின் இடையே உங்களின் மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற இறக்கமான சூழல் காணப்படும். சுய தொழில் செய்பவர்கள் தொழில் முன்னேற்றமான சூழலை காண்பார்கள்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேல்நிலை பள்ளி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. இணையதளத்தின் தேவையை அறிந்து பயன்படுத்தவும். போதுமான தூக்கம் அவசியம் நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளில் இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் நிறைவேறும். விருப்பமான துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் அமையும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
வழிபாடுகள்
இந்த புத்தாண்டு மேஷ ராசியினருக்கு மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வழிபடுவது நன்மையை உண்டாக்கும்.
முடிவுரை
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து பலன்களும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ராசியில் உங்களுக்கான வரங்களை அறிய இன்றே நித்ரா மேட்ரிமோனியை பார்வையிடுங்கள்.