Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
2024 Ungal Rasiku Etra Athirshta Nirangal
Dhanraj

2024-ல் உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறங்கள்!

💠 ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் மற்றும் திசை என இருக்கும். நம்முடைய ராசிக்குரிய நிறத்தில் உடை உடுத்துவது, அந்த நிறத்தில் ராசிக்கற்களை அணிந்து கொள்வது அல்லது அந்த நிறத்திலான பொருள் ஏதாவது ஒன்றை நம்முடனேயே வைத்துக் கொள்வது என நம்முடைய வாழ்வில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

💠 2024-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் ராசியின் அடிப்படையில் எந்த நிறத்தை அதிகம் பயன்படுத்தினால் கிரகங்களின் மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீண்டு, நன்மைகளை அதிகம் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த நிறங்கள் நம்முடைய அதிர்ஷ்டத்தை மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் அதிகப்படும். இன்னும் உங்களுக்கு திருமண வரன் அமையவில்லையா? இனி எதற்கு இந்த கவலை? உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட நிறத்தினை பயன்படுத்தி வாழ்க்கை துணை எனும் அதிர்ஷ்டத்தைக் காண இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்!!

அதிர்ஷ்ட நிறங்கள்:

💠 ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் நிறங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கேற்ற நிறங்களை தொடர்ந்து பயன்படுத்துவதினால் பல நன்மைகளை அவர்கள் பெற வாய்ப்புள்ளது. நிறங்களுக்கும் நம்முடைய ஆராவிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம்முடைய ஆராவிற்கு சாதகமான நிறங்களில் உடைகளை அணியும் பொழுது நம்முடைய உடலும் மனமும் எனர்ஜியாக இருப்பதாகவும், சில குறிப்பிட்ட நிறங்களில் உடை அணியும் போது சோர்வையும், எதிர்மறை எண்ணங்களையும் உணர்வதாகவும் கூறப்படுகிறது.

2024-க்கான அதிர்ஷ்ட நிறம்:

💠 ஆண்டு பிறந்தாலே இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கும், என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளவதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்கள். ஜோதிட நிபுணர்கள் பலரும் 2024-ம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை கணித்து பலன்களை சொல்லி வருகின்றனர். நம்முடைய ராசிப்படி 2024-ல் எந்த கோவிலுக்கு சென்று, என்ன வழிபாடு செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும், என்ன பொருள் வாங்கினால் நன்மை நடக்கும் என தெரிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆவலாக உள்ளனர். அப்படி 2024-ம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த நிறத்தை அதிகம் பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளவோம் வாருங்கள்.

மேஷம்:

💠 மேஷம், இது நெருப்பு ராசியாகும். மேஷ ராசி அதிர்ஷ்ட நிறம் 2024-ல் சிவப்பு. இவர்கள் இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்தினால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் கிட்டும். சிவப்பு நிறம் உங்களை சுற்றியிருந்தால் உங்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வடக்கு திசையை இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தினால் உங்களின் இலக்குகளை நோக்கி நீங்கள் எளிதில் உற்சாகத்துடன் முன்னேற முடியும்.

ரிஷப ராசி அதிர்ஷ்ட நிறம்:

💠 2024-ம் ஆண்டு உங்களுக்கு ஆக்கப்பூர்வமானதாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்களின் பதற்றம் மற்றும் கவலைகள் குறைவதற்கு இந்த ஆண்டு மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்துங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வையும் தைரியம் மற்றும் நம்பிக்கையையும் கொடுக்கும்.

மிதுனம்:

💠 2024-ம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மே மாதம் குரு பகவான் உங்களின் ராசியில் நுழைவது உங்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் செல்வாக்கை அதிகப்படுத்துகிறது. இந்த ஆண்டில் சில்வர் நிறத்தை அதிகம் பயன்படுத்துவது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிககரிக்கச் செய்யும். வெள்ளி நகைகளில் முதலீடுகள் செய்தல், வெள்ளி நகைகளை அணிதல் போன்றவை உங்களுக்கு லாபத்தை தரும்.

கடகம்:

💠 இந்த ஆண்டு உங்களுக்கு தெய்வ சக்தி பாதுகாப்பாக இருக்கும். மே மாதத்தில் வியாழன் உங்கள் ராசிக்கு 12-ல் நுழைவதால் ஆன்மிகம் தொடர்பான எண்ணங்களை அதிகரிக்கும். 2024-ம் ஆண்டில் கடக ராசி அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்மை நிற பொருட்கள் மற்றும் ஆடைகளை அதிகம் பயன்படுத்துவதால் தெய்வீக தன்மையை பெறுவீர்கள்.

சிம்மம்:

💠 இந்த ஆண்டு தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. லைட் ப்ளூ நிறத்தை அதிகம் பயன்படுத்துவதுவதால் மற்றவர்களுடன் நல்ல உறவை பாதுகாக்க முடியும். உங்களின் எண்ணங்களை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும். மற்றவர்களுடனான தொடர்பு உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகத்திலும் நல்ல மதிப்பினை ஏற்படுத்தித் தரும்.

கன்னி:

💠 இந்த ஆண்டு முழுவதும் ஆற்றலும் அதிகாரமும் அதிகமாக உங்களுக்கு காணப்படும். இந்த ஆண்டு ஆரஞ்சு நிறத்தை நீங்கள் அதிகம் பயன்படுத்துவதன் வாயிலாக உங்களின் தனித்தன்மை வெளிப்படும். இந்த நிறம் உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இது மற்றவர்களுடனான உங்களின் உறவை பலப்பட செய்யும்.

துலாம்:

💠 இந்த ஆண்டும் உங்களின் வளர்ச்சி தொடரும். தெற்கு திசையை பயன்படுத்துவதால் உங்களின் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பிங்க் நிறத்தை அதிகம் பயன்படுத்துங்கள். இது உங்களை புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

விருச்சிகம்:

💠 2024-ம் ஆண்டில் தந்திரமாக செயல்பட போகிறீர்கள். ஆண்டின் பெரும்பான்மையான பகுதி மிகவும் அதிர்ஷ்டகரமாகவே உங்களுக்கு இருக்கப்போகிறது. உங்களின் அறிவுத்திறன், முடிவெடுக்கும் திறன் வெளிப்படும். இவற்றை சரியாக வழிநடத்திச் செல்வதற்கு விருச்சிக ராசி அதிர்ஷ்ட நிறம் ஊதா ஆகும்.

தனுசு:

💠 தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பல வகையில் அதிகாரங்கள் வரப்போகிறது. 2024-ம் ஆண்டு உங்களுக்கு தெளிவை தரப்போகிறது. சனி, கேது ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட போகின்றன. இந்த ஆண்டு தனுசு ராசி அதிர்ஷ்ட நிறம் ஊதா. தனுசு ராசி லக்கி கலர் அதிகம் பயன்படுத்துவது உங்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு பிறக்கும்.

மகர ராசி அதிர்ஷ்ட நிறம்:

💠 மகர ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்க போகிறது. இயற்கையுடன் சார்ந்த விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்பனதாக்கும். இந்த ஆண்டு பச்சை நிறத்தை அதிகம் பயன்படுத்துவதால் உங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. வீட்டிற்குள் செடிகள் வைத்து வளர்ப்பதும் சிறப்பாகும்.

கும்ப ராசி அதிர்ஷ்ட நிறம்:

💠 இனிதான வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணரப் போகிறீர்கள். ராகு-கேது உங்களுக்கு அபரிமிதமான வலிமையை தரப்போகிறது. உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க இளம் சிவப்பு நிறங்களை பயன்படுத்தலாம். இந்த தைரியத்தின் வாயிலாக உங்களின் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

மீன ராசி அதிர்ஷ்ட நிறம்

💠 இந்த ஆண்டு உங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் ஆண்டாக அமையும். நீங்கள் இந்த ஆண்டு அடர் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்துவதால் நீண்ட நாட்களுக்கு பல பலன்தரும் விஷயங்களை செய்ய உதவியாக இருக்கும். படிப்பு, வேலை, தொழில் என எதுவாக இருந்தாலும் நீங்கள் முன்னேற்றம் அடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைத்தால் அடர் மஞ்சள் நிறத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

💠 மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024-ல் உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறங்கள் பற்றிய பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் வாழ்விலும் அதிர்ஷ்டம் கொட்ட இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக திருமண வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு அதிர்ஷ்டத்தில் நிறைந்திடுங்கள்!!


2024 thiumana natkal


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.