2024 சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?
🌞 2024 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணமாக தோன்றும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் நிகழவுள்ளது. சூரிய கிரகணம் பௌர்ணமி அன்று நிகழ்கிறது. வாருங்கள் சூரிய கிரகணம் பற்றிய தகவல்களை விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் உடன் பிறந்தவர்களுக்கோ வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? இன்னும் வரன் அமையவில்லையா? உடனே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்! கல்யாணத்தை முடியுங்க!!கிரகணம் என்றால் என்ன?
🌞 சூரியனுக்கும்-பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம் என்பதால், இந்த கிரகணத்தில் சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில், சந்திரன் சூரியனை மறைக்கும். அத்தகைய சூழ்நிலையில் சூரியன் ஒரு வளையல் போல் தோன்றும். இது ரிங் ஆஃப் ஃபயர் (சூரிய கிரகணம்) என்று அழைக்கப்படுகிறது.முதல் சூரிய கிரகணம்:
🌞 ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகண நிகழ்வு ஆன்மிகக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மறுபுறம், அறிவியல் பார்வையில், கிரகண நிகழ்வு ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆன்மிகம் மற்றும் அறிவியல் நம்பிக்கைகளின்படி, கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும், இந்த நாளில் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.🌞 ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம் குறைந்த பட்சம் இரு முறை தோன்றும். 2024-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது முழுமையான சூரிய கிரகணமாக தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை நிகழ இருக்கிறது. இது இந்திய நேரப்படி மாலை 4.38 மணிக்கு தொடங்கி இரவு 8.52 மணிக்கு முடிவடைகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
சூதக் காலம் என்றால் என்ன?
🌞 பஞ்சாங்கத்தின் படி, சூதக் காலம் என்பது கிரகணத்திற்கு 09 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது. இந்த காலகட்டம் சூதக் (Sutak) என்று கூறப்படுகிறது. அதாவது, தோஷ காலம் என்று கூறுவர். இந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலம் மாசுபடுகிறது. இது போன்று மாசுபாட்டால் ஏற்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்க விளைவுகளைத் தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுயுள்ளது. மேலும், இந்த நேரத்தில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்யக் கூடாது. அனைத்து கோவிலின் கதவுகள் கூட சூதக் காலத்திற்குப் பிறகு மூடப்பட்டு பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும்.கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை:
🌞 கிரகணத்தின் போது சூரியனின் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்மைத் தாக்கும். எனவே, சூரிய கிரகணத்தின் போது வெளியில் செல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.🌞 கண்ணுக்குத் தெரியாத பல உயிரினங்கள் தீய கதிர்களால் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, சமைத்த உணவை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
🌞 கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது.
🌞 கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு ஏற்படும் பகுதியில் தேய்த்தால் குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்ற கருப்பு நிறம் வர வாய்ப்புள்ளதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
🌞 கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதை தவிர்க்கவும்.
🌞 கிரகணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் உணவு உட்கொள்ள வேண்டும்.
தர்ப்பைப் புல்:
🌞 தர்ப்பைப் புல்லுக்கு கதிர்வீச்சைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால், நமது முன்னோர்கள் கிரகணத்தின் போது உணவுப் பாத்திரத்தில் தார்பை புல்லைப் போட்டு வைத்திருந்தார்கள்.கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
🌞 மந்திர சாஸ்திரத்தில், ஒரு முறை இஷ்ட தெய்வத்தை வேண்டி அதற்கான மந்திரம் ஜெபித்தால் ஒரு மடங்கு பலன் கிடைக்கும், அந்தி சாயும் நேரத்தில் செய்தால், 10 மடங்கு பலன் கிடைக்கும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால், 100 மடங்கு பலன் கிடைக்கும். பெளர்ணமி, அமாவாசை நாளில் செய்தால் 1000 மடங்கு பலன் கிடைக்கும். இதையே கிரகண நேரத்தில் செய்தால் லட்சக்கணக்கான பலன்கள் கிடைக்கும். எனவே சாதாரண வேலையை விட்டுவிட்டு இறைவனிடம் முழுமையாக சரணடைவது நல்லது.🌞 கிரகணம் முடிந்ததும் வீட்டை நன்கு சுத்தம் செய்து குளித்து, தீபம் ஏற்றி இறைவனை கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
🌞 கிரகணத்திற்குப் பிறகு கடலிலோ அல்லது அல்லது கல் உப்பு போட்ட தண்ணீரில் குளிப்பது நல்லது. அப்படிச் செய்தால் கிரகணத்தின் போது ஏற்பட்ட கெட்ட கதிர்களால் இறந்த நுண்ணுயிரிகள் நம் உடலில் இருந்து அகற்றப்படும்.
2024 சூரிய கிரகணம் எந்த ராசிகெல்லாம் அதிர்ஷ்டம்:
🌞 அயோத்தி ஜோதிடர் பண்டிட் கல்கி ராமின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நிகழும் இரண்டு கிரகணங்களும் இந்தியாவில் காணப்படாது, ஆனால் ஒவ்வொரு 12 ராசி அறிகுறிகளையும் பாதிக்கும். இது சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு எதிர்மறையாகவும் இருக்கலாம். ஆனால் 2024 முதல் சூரிய கிரகணத்தால் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும் என்பதில் மாற்றம் இல்லை.மேஷம்:
🌞 மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த முதல் சூரிய கிரகணம், எல்லாம் நன்மைகளையும் தரும். நிதி நிலைமை மேம்படும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும், வியாபாரம் மேம்படும்.
மிதுனம்:
🌞 மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும், கல்வி, வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்கள் பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.
சிம்மம்:
🌞 சிம்ம ராசிக்காரர்களுக்கு கிரகணம் மிகவும் சிறப்பாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும், சமய பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், வெளியூர் பயணம் அதிகரிக்கும்.
கன்னி:
🌞 இந்த கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கும் சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் இருக்கும், முதலீட்டைப் பற்றி யோசித்தால் இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும், குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் கிடைக்கும், எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
தனுசு:
🌞 தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், நிதி நிலை வலுவடையும், மரியாதை அதிகரிக்கும், புதிய வேலைகள் கிடைக்கும். முதலீட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
முடிவுரை
🌞 அன்பார்ந்த பயனாளர்களே! ஏப்ரல் 8ஆம் தேதி நிகழ இருக்கிற சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது, ஆனால் சில ஊடகங்கள் தொலைக்காட்சி வழியாக நேரலையில் ஒளிபரப்புவார்கள் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்! மேலும், உங்களுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லையா? நல்ல வாழ்க்கைத் துணையை அடைய இன்றே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்! ஜம்முன்னு வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணுங்க!!