Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
2024 Puththandu Palankal Kumbam Rasi
Dhanraj

2024 புத்தாண்டு பலன்கள் - கும்பம்

💙 அமைதியாக இருந்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்னென்ன? என்பதை நாம் இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்..! திருமணம் என்பது திருமண நாளை ஒருபோதும் நினைவில் கொள்ளாத ஒருவருக்கும், அவற்றை ஒருபோதும் மறக்காத மற்றொரு நபருக்கும் இடையிலான பிணைப்பு. கும்பராசி அன்பர்களே..!! உங்களோடு இணையத் துடிக்கும் துணையைத் தேடிக் கொண்டுள்ளீர்களா? நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்!! பிணைப்பை உருவாக்குங்கள்!!

கும்பம் ராசி :

💙 நினைத்த காரியத்தை நிறைவேற்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவீர்கள். இலக்கியம், நாவல் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பம் உண்டாகும்.

💙 பிரம்மாண்டமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். கால்நடை வளர்ப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

💙 ஆடம்பரமான புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் தன்மை அறிந்து செயல்படவும். அலங்காரப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சலுக்குப் பின்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் :

💙 உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொழுப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும்.

பெண்கள் :

💙 பெண்களுக்கு செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிலும் அலட்சியப் போக்கின்றி செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் தொழில் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும்.

மாணவர்கள் :

💙 மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும் பயணங்களின் மூலம் புதிய ஆதாயம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் :

💙 உத்தியோகப் பணிகளில் நல்ல மதிப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். தினந்தோறும் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தவும்.

வியாபாரிகள் :

💙 வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். பயணம் சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். எதிர் பாலின மக்கள் வழியில் அனுகூலம் பிறக்கும். இடமாற்றம் குறித்த சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். கிளைகளை விரிவுபடுத்துவதற்கான சூழல் மற்றும் உதவிகள் கிடைக்கும். உழைப்பையும், முயற்சியையும் அதிகப்படுத்துவதன் மூலம் புதிய இலக்குகளை அடைவீர்கள்.

கலைஞர்கள் :

💙 கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சில ஒப்பந்தங்களில் தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. வருவாய் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ரசனை தன்மைகளை அறிந்து சில வியூகங்களை அமைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் :

💙 அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் கொள்ளாமல் இருக்கவும். வழக்கு விஷயங்களில் பொறுமையைக் கையாள்வது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். சஞ்சலமான சிந்தனைகளால் புதிய அனுபவம் ஏற்படும்.

வழிபாடுகள் :

💙 திங்கட்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபாடு செய்துவர செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

💙 இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. திருமணம் என்பது கடவுளின் பரிசு!!அந்தப் பரிசுக்காக நீங்கள் தவம் இருக்கிறீர்களா? உங்கள் தவத்திற்கான முழுப் பலன்களையும் பெற நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கான பரிசைக் கடவுளின் ஆசியுடன் கரம் பிடியுங்கள்!!


2024 kumbam rasipalan


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location