2024 புத்தாண்டு பலன்கள் - மேஷம் ராசி
துடிப்பும், வேகமும் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆழ்ந்த அன்புடனும் நேசத்துடனும் உங்கள் திருமண வாழ்க்கை துணையைத் தேட நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்.
மேஷம் ராசி:
🤴 மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.
👸 கோவில் மற்றும் திருப்பணிகளில் ஆர்வமும், தெளிவும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். குழப்பமான எண்ணங்களால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும்.
🤴 குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். கடின உழைப்பிற்குப் பின்பே நினைத்த பணிகள் நிறைவேறும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் அமையும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
👸 நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். பணி சார்ந்த புதிய வாய்ப்புகள் சிலருக்குச் சாதகமாக அமையும். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீதான எண்ணங்கள் மேம்படும்.
உடல் ஆரோக்கியம் :
💝 உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை ஏற்படும். உடலில் இருந்துவந்த எலும்புப் பிரச்சனைகள் தீரும்.
பெண்கள் :
🧚 பெண்கள் சூழ்நிலை அறிந்து காரியத்தை மேற்கொள்வது நன்மை பயக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். உடனிருப்பவர்களிடம் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். நம்பிக்கையானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
மாணவர்கள் :
🧑 மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகவும். பேச்சுக்களில் விவேகம் வேண்டும். மேல்நிலைக் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர்நிலைக் கல்வியில் ஆலோசனைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். தடைபட்ட பட்டம் சார்ந்த படிப்புகள் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
🧑 உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். சிறு சிறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஊதிய உயர்விற்கான வாய்ப்புகள் தாமதமாகும். உங்கள் மீதான வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
வியாபாரிகள் :
👷 தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வளர்ச்சிக்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் லாபம் ஏற்படும். விவசாய பொருட்களின் மூலம் ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். மறுசுழற்சித் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கலைஞர்கள் :
🧍 கலைத்துறையினருக்கு வசீகரமும், திறமையும் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். ரசனைத் தன்மையில் மாற்றம் உண்டாகும். எதிர் பாலின மக்களின் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். வரவை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் அமையும்.
அரசியல்வாதிகள் :
🧍 அரசியல்வாதிகளுக்குத் தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது.
வழிபாடு :
🙏 செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபட மனக்கவலைகள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
முடிவுரை :
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். இவை அனைத்தும் மேஷம் ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான பொதுவான ராசி பலன்களே ஆகும். மேஷம் ராசியில் பிறந்தவர்களே, உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது! உங்கள் கனவு துணையைக் கண்டுபிடிக்க நித்ரா மணமாலையில் இலவசமாக பதிவு செய்யுங்கள்.