2024 புத்தாண்டு பலன்கள் - தனுசு ராசி
💜 எல்லோரிடமும் அன்பாக இருக்கும் தனுசு ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன என்ன என்பதை நாம் இந்தப் பதிவின் மூலமாக அறிந்து கொள்வோம்..! சுதந்திரத்தை விரும்பும் தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம்) அன்பர்களே..! இன்னும் திருமணப் பந்தம் கைக்கூடவில்லையா? எங்கு தேடியும் பொருத்தமான வரன்கள் அமையவில்லையா? உங்களுக்காகவே சிறந்த சேவைகளை நித்ரா மேட்ரிமோனி வழங்கி வருகிறது. இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்!!
தனுசு ராசி:
💜 குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். எதிலும் துரிதமாகச் செயல்படுவீர்கள். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தைச் செய்வீர்கள். தேவையில்லாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிடாதீர்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
💜 மனதில் நினைத்திருந்த ஒரு சில ஆசைகள் நிறைவேறும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றுமதி துறையில் புதுமையான அனுபவம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளால் சேமிப்பு குறையும்.
💜 நடைமுறைக்குத் தகுந்த விதத்தில் வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். நரம்பு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை மேம்படுத்தும்.
உடல் ஆரோக்கியம் :
💜 உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வப்போது ஒற்றைத் தலைவலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
பெண்கள் :
💜 பெண்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
💜 வாகனப் பயணங்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மறைமுகமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
மாணவர்கள் :
💜 மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பமும், தயக்கமும் படிப்படியாகக் குறையும். புதிய ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டுத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
💜 உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.
💜 உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகம் சார்ந்த ரகசியங்களில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களால் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகள் :
💜 வியாபாரப் பணிகளில் தகுந்த ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். எதிர்பாராத சில தடைகளால் தாமதமும், அலைச்சலும் ஏற்படும். நடைமுறை வியூகங்களை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
கலைஞர்கள் :
💜 கலை சார்ந்த துறைகளில் புதுவிதமான அனுபவங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். அளவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
💜 வெளிவட்டாரத்தில் திறமைக்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கடைசி நிமிடத்தில் நினைத்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் :
💜 அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த பணிகளில் விவேகத்தோடு செயல்படவும். உடனிருப்பவர்களிடம் முன் கோபமின்றி செயல்படுதல் நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் உடலில் ஒருவிதமான அசதி உண்டாகும். ஆதாரம் இல்லாத கருத்துகள் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடுகள் :
💜 செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், மனதளவில் உத்வேகமும் பிறக்கும்.
💜 இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். எல்லோரிடமும் அன்பை பொழிந்திடும் தனுசு ராசி அன்பர்களே..! இனிமையான திருமண வாழ்க்கை என்பது குறைகள் உள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது தான்.
💜 நேர்மையின் பண்புடைய தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம்) அன்பர்களே..! உங்கள் ராசிக்கேற்ற வரன் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள்..!! நித்ரா மேட்ரிமோனியில் ஜோதிட பொருத்தம் அடிப்படையில் உங்கள் சரியான பொருத்தத்தைக் கண்டறியுங்கள். மேலும், விரிவான ஜோதிட சுயவிவரங்களையும் பொருத்தம் பகுப்பாய்வையும் நித்ரா மேட்ரிமோனி வழங்குகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டறியும் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!