2024 புத்தாண்டு பலன்கள் மிதுனம் ராசி!!
2024 ஆங்கிலப் புத்தாண்டில், குரு பெயர்ச்சியாகி மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார். அதேசமயம் நீதியின் கடவுளான சனி கும்ப ராசியில் சஞ்சரிப்பார். இது தவிர சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறார் என்பதை இந்தப் பதிவில் காண்போம். மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கோ அல்லது உங்கள் அக்கா-தங்கை, அண்ணன்-தம்பிகளுக்கோ வரன் அமையாமல் தள்ளிப் போகிறதா? இனிமே கவலையை விடுங்க!! உடனே நம்ம நித்ரா மணமாலையில் பதிவு பண்ணுங்க!! வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழத் தொடங்குங்கள்!!
மிதுனம் ராசி:
💖 எதிலும் புத்திசாலித்தனமாகச் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..!
💖 உங்கள் செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பழகும் தன்மைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சிக்கலான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்வீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் ஆசைகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.
💖 வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தனவரவுகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி திட்டங்களில் புதிய அனுபவம் ஏற்படும். நிலையான வருமானத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள்.
💖 மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எரிவாயு சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் சாதகமாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று புதிய பயிர்களை பயிரிடவும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் :
💖 கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூரிய ஒளியில் சிறு நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.
💖 இயற்கையான அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. பழுப்பு அரிசி, சாக்லேட், காலிஃபிளவர் மற்றும் பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். காலம் தவறி உணவு உண்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பெண்கள் :
💖 பெண்கள் கனிவான பேச்சுக்களின் மூலம் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நேரம் தவறிய பயணத்தைக் குறைத்துக் கொள்ளவும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும்.
💖 சிறு சிறு விஷயங்களைப் பெரிது படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடத்தில் இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. வாகனப் பயணத்தில் சரியான கோப்புகளை கையாளவும். பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் :
💖 மாணவர்களுக்கு கல்விப் பணியில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விளையாட்டுகளில் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும். வஞ்சனையான முயற்சிகளைத் தவிர்க்கவும். தந்தையிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை ஏற்படுத்தும். முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் உயர்கல்வியில் எண்ணியவை ஈடேறும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் :
💖 கணிப்பொறி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளைக் குறித்த கருத்துகளை வெளியிடுவதில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
💖 கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளில் உண்மை நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். நீண்ட நாள் சேமிப்புகளிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகள் :
💖 தொழில் சார்ந்த முயற்சிகளில் உழைப்பு மேம்படும். நடைமுறைக்கு ஏற்ப தொழிலில் மாற்றம் செய்வது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். பேராசையின்றி கிடைப்பதை வைத்து மனத்திருப்தி அடையவும். திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் உழைப்பும், தாமதமும் உண்டாகும்.
💖 நாகரிகமான பேச்சுக்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும். மளிகைக் கடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரச்சாரம் செய்தல் போன்றவற்றால் அனுகூலமும், அனுபவமும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் புரிதலும், ஒத்துழைப்பும் மேம்படும். இன்சூரன்ஸ் துறைகளால் ஆதாயம் ஏற்படும்.
கலைஞர்கள் :
💖 கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உங்கள் மீது இருந்த சிறு சிறு கிசுகிசுக்கள் மறையும். எளிமையான பழக்கவழக்கம் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
💖 வரைகலை துறைகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். எழுத்து துறைகளில் உண்மை கருத்துகளை சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்துவது நல்லது. ஆடை வடிவமைப்பு துறைகளில் இருப்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் :
💖 அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கட்சி தோழர்களிடம் உண்மையுடன் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் விரயம் உண்டாகும்.
💖 உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். எதிர்ப்புகளின் மூலம் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். பேச்சுக்களில் இருக்கும் உறுதி செயல்களில் இருந்தால், பலதரப்பட்ட ஆதரவு கிடைக்கும்.
வழிபாடு :
💖 புதன்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபட உடல் ஆரோக்கியமும், உறவுகள் வழியில் ஒத்துழைப்பும் உண்டாகும்.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப பலன்கள் கிடைக்கும். ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் உங்களுக்கு நற்பலன்களாக இருக்கும் என்று நம்புகின்றோம். மிதுன ராசிக்காரர்களே! இன்னும் திருமணம் ஆகவில்லையா? நல்ல வரன் கிடைக்கவில்லை என்று கவலையா? உடனே நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! உங்களைத் தேடி வரன்கள் வரும். அப்புறம் என்னங்க..!! உங்க வீட்டு மகாராஜன்/மகாராணி கரங்களை இன்றே பதிவு செய்து பிடியுங்கள்!!