Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம் ராசி

💞 சுறுசுறுப்பாகவும், துடிப்புடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்னென்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! திருமணம் என்பது வாழ்வின் புதிய அத்தியாயம் இந்த அத்தியாத்தில் காதலும், பாசமும் இணைந்தே இருக்கும். இத்தகைய திருமணத்திற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்றே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்து, உங்கள் ஆத்ம துணையோடு இணையுங்கள்!!

விருச்சிகம் ராசி:

💞 மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இழுபறியான முயற்சிகள் கைகூடும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பாகப் பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

💞 பொழுதுபோக்கு செயல்களில் நெருக்கடியான சூழல் ஏற்படும். சூடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தவறிய நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

💞 கட்டிட வடிவமைப்பு சார்ந்த தொழிலில் அனுகூலம் ஏற்படும். ஊடகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஒருதலையான விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். வித்தியாசமான செயல்களின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:

💞 உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். அடிவயிற்றுப் பகுதியில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பழவகைகள் மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பெண்கள்:

💞 பெண்களுக்கு ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களில் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. காரசாரமான விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும்.

மாணவர்கள்:

💞 மாணவர்கள் பேச்சுக்களில் கவனத்துடன் இருக்கவும். உயர்நிலைக் கல்வியில் அலைச்சலும் புரிதலின்மையும் நேரிடலாம். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணிதத்துறை சார்ந்த மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கணிப்பொறியியல் சார்ந்த துறைகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

💞 உத்தியோகத்தில் இருந்துவந்த சில சங்கடமான சூழல் மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணி நிமிர்த்தமான சில பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். அலுவல் பணியில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், அறிமுகமும் ஏற்படும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

வியாபாரிகள்:

💞 வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் குறையும். சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். லாபத்தை தனியே எடுத்து வைப்பது நல்லது. எதிலும் பேராசையின்றி அளவுடன் இருந்தால் மனநிம்மதி ஏற்படும். பொருட்களில் தரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

கலைஞர்கள்:

💞 கலைத்துறையில் புதுவிதமான தேடல் ஏற்படும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் போட்டியும் புதிய அனுபவமும் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகள்:

💞 அரசியல்வாதிகள் சூழ்நிலையறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போல வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொய்யான வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது.

வழிபாடுகள்:

💞 புதன்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த தடைகள் விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

💞 இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். இவை அனைத்தும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் பொதுவான ராசி பலன்களே ஆகும். திருமணம் என்பது ஒரு வரமாகும். அது எப்போதும் அற்புதமானது மகிழ்ச்சியானது மற்றும் நிறைவானது. மேலும், திருமணம் எப்போதும் வாழ்க்கையை பிரகாசமாக்குகிறது. விருச்சிக ராசி அன்பர்களே!! உங்களுக்கு இன்னும் திருமண வரன் அமையவில்லையா?? இனி கவலையே வேண்டாம். நமது நித்ரா மணமாலையில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் கனவுத் துணையைத் தேர்ந்தெடுங்கள்!!

matrimony registration

Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.