2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம் ராசி
🎀 எதிலும் அகப்படாமல் சிந்தித்து செயலாற்றும் மீன ராசி அன்பர்களே..!பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புகளின்படி, வாழ்க்கையில், இனிவரும் நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இது புதிய தொடக்கங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளின் காலமாகும். புதிய தொடக்கமான இந்த திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? உடனே நமது நித்ரா மணமாலையில் வரன்பதிவு செய்யுங்கள்!! அடுத்த சுப முகூர்த்திலேயே திருமணத்தை செய்து மகிழுங்கள்!!
மீனம் ராசி:
🎀 மனதளவில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த மானியம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் மனதிற்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்வீர்கள்.
🎀 இளைய சகோதரர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். கலாச்சாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
🎀 வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். வாழ்க்கைத் துணைவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது குழப்பங்களைத் தவிர்க்கும்.
உடல் ஆரோக்கியம்:
🎀 உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாகக் குறையும். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் விலகும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அவ்வப்போது வயிற்றில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
பெண்கள்:
🎀 பெண்களுக்கு மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும்.
மாணவர்கள்:
🎀 மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். புதிய விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகஸ்தர்கள்:
🎀 உத்தியோகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். சிறு சிறு முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வத்தோடு கலந்து கொள்வீர்கள். சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய கருத்துகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.
வியாபாரிகள்:
🎀 வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். அரசு வகையில் சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வியாபாரம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
கலைஞர்கள்:
🎀 கலைத்துறையில் இருப்பவர்கள் சஞ்சலம் இன்றி செயல்படவும். ஓவியத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், ஆதரவான சூழலும் உண்டாகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். விளம்பரம் தொடர்பான துறைகளில் அனுகூலம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்:
🎀 அரசியல்வாதிகள் மனசாட்சி படி செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளை செயல்படுத்தும் போது அலட்சியம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
வழிபாடுகள்:
🎀 புதன்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபாடு செய்துவர சுப காரியங்கள் கைகூடிவரும்.
🎀 மேலே கூறிப்பிட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். இவை அனைத்தும் மீனம் ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் பொதுவான ராசி பலன்களே ஆகும். உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து ஐயந்தெளிந்து அன்போடு, அகிலம் போற்ற இனிதாய் வாழ்வதே திருமணம் ஆகும். மீன ராசி அன்பர்களே!! உங்கள் அன்பான உலகத்தை காண, இன்றே நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்து, உங்கள் துணையோடு அன்பான வாழ்க்கையை தொடங்குங்கள்!!