2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மகரம் ராசி
💟 விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் மகர ராசி அன்பர்களே..!பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கேற்ப இனிவரும் நாட்களில், வாழ்க்கையில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! திருமணம் நிகழ்ச்சியானது மகிழ்ச்சியும், அனுபவங்களும், உங்கள் குடும்பங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். மகர ராசி அன்பர்களே..! உங்களுக்கான திருமண வரன்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா!! இன்றே நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்து, உங்கள் ராசிக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுங்கள்!!
மகரம் ராசி:
💟 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் பிறக்கும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சோம்பலால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும்.
💟 சுகபோக விஷயங்களில் நாட்டம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
💟 வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்:
💟 உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். தியானம் மற்றும் சிறு அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும். வாகன பழுதுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ளவும்.
பெண்கள்:
💟 பெண்களுக்கு சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அலைச்சலுக்கு பின்பு கைகூடும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான பணிகளைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள்:
💟 மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மறதி தொடர்பான சிக்கல் தோன்றி மறையும். ஆராய்ச்சி பணி சார்ந்த வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்கள்:
💟 உத்தியோகஸ்தர்களுக்கு வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். சக பணியாளர்களிடம் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். அறிமுக நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். வெளியூர் பணி வாய்ப்புகளில் சிந்தித்துச் செயல்படவும்.
வியாபாரிகள்:
💟 வியாபாரப் பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆலோசனை வேண்டும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும்.
கலைஞர்கள்:
💟 கலை சார்ந்த துறையில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். காரசாரமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும்.
அரசியல்வாதிகள்:
💟 அரசியல்வாதிகள் சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய மாற்றங்களை உருவாக்குவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் அதிகரிக்கும். எதிராக இருப்பவர்களை அறிந்து கொள்வீர்கள். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும்.
வழிபாடுகள்:
💟 வெள்ளிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர செய்யும் முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கும்.
💟 மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்பவே கிடைக்கும். இவை அனைத்தும் மகர ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் பொதுவான ராசி பலன்களே ஆகும். திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பன்முகப்பட்ட நிகழ்வாகும். திருமணத்தின் அர்த்தங்கள் பல்வேறுபட்டவை, ஆனால் அவை அனைத்தும் ஒரே இலக்கைக் கொண்டுள்ளது. அது, இரண்டு நபர்கள் தங்கள் அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாகும். மகர ராசிக்காரர்களே!! உங்களுக்கான துணையைக் காண, உடனே நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் அன்புத் துணையோடு இணையுங்கள்!!