2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி
♍ புதுமையான சிந்தனைகள் உடைய கன்னி ராசி அன்பர்களே..! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! திருமண விழா என்பது, மணமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் காதல், பாசம், கருணை மற்றும் விசுவாசத்துடன் இருப்பதாக உறுதியளிக்கும் ஒரு சடங்காகும். இந்த நாள், மணமக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். இத்தகைய புனிதமான திருமணத்தை செய்ய நமது நித்ரா மணமாலையில் இன்றே வரன்பதிவு செய்யுங்கள்!! உங்கள் வாழ்க்கைத் துணையோடு இணையுங்கள்!!
கன்னி ராசி:
♍ மனதில் தைரியம் உண்டாகும். பேச்சுக்களில் ஆளுமைத் திறன் மேம்படும். குறுகிய தூரப் பயணங்களால் விருப்பம் நிறைவேறும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
♍ நுண் கலைகளில் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு கிடைக்கும். இணைய வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்குண்டான உயர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வீடு கட்டுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
♍ செங்கல் மற்றும் மணல் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.
உடல் ஆரோக்கியம்:
♍ உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தூக்கமின்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலளவில் இருந்துவந்த அசதிகள் மற்றும் சோர்வுகள் படிப்படியாகக் குறையும். முழங்கால் பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.
பெண்கள்:
♍ பெண்கள் முடிந்து போன சில விஷயங்களை எண்ணாமல் இருப்பது நல்லது. முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
மாணவர்கள்:
♍ மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு விஷயங்களில் பொழுதுகளைக் கழிப்பீர்கள். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் அலைச்சல்களுக்குப் பின்பே அனுகூலம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள்:
♍ உத்தியோகப் பணிகளில் ஆதாயமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப வருவாய் உயர்வு அமையும். உபரி வருமான முயற்சிகள் கைகூடிவரும். தற்பெருமைக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.உயர் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் அமையும்..
வியாபாரிகள்:
♍ வியாபாரப் பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் வழியில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை மேம்படுத்த முடியும். அபிவிருத்திக்கான செயல்களில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். இடமாற்ற சிந்தனைகள் மனதளவில் மேம்படும். வங்கிக் கடன்கள் சிறு தாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.
கலைஞர்கள்:
♍ கலைத்துறையில் அனுகூலமான சூழல் ஏற்படும். வரவேண்டிய வரவுகள் காலதாமதமாக கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மதிப்பையும் நிபுணத்துவத்தையும் தரும். சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது பகைமையைத் தவிர்க்கும்.
அரசியல்வாதிகள்:
♍ அரசியல்வாதிகள் குதர்க்கமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வழக்கு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டமும், அனுபவமும் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து அதன்படி நடப்பது நல்ல மதிப்பையும் நல்லொழுக்கத்தையும் தருகிறது.
வழிபாடுகள்:
♍ பௌர்ணமிதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும். தடைபட்ட பணிகள் முடிவுபெறும்.
♍இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். இவை அனைத்தும் கன்னி ராசிக்காரர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் பொதுவான ஜாதக பலன்களே ஆகும். திருமணம் என்பது இரு இதயங்கள் இணையும் புனிதமான நிகழ்வு. இந்த நாளில், இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்து, மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். கன்னி ராசி அன்பர்களே!! நீங்கள் உங்களுக்கான வரன்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இனி ஏன் இந்த கவலை... உடனே நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையுடன் இணைந்து எதிர்கால பயணத்தைத் தொடங்குங்கள்!!