உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Dhanraj
சந்திர கிரகணம் நிகழும் நேரம்.. இந்தியாவில் தெரியுமா?
சந்திர கிரகணம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.தோஷக்கிழமை :
சனிக்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினிபரணி
மகம்
மூலம்
ரேவதி
இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் சாந்தி பூஜை செய்து கொள்ளவும்.
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
இந்திய நேரப்படி இரவில் தெளிவாக சந்திரன் தெரியக்கூடிய நேரத்தில் கிரகணம் நிகழ உள்ளதால், இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியும்.மேலும்,
மேற்கு பசிபிக் பெருங்கடல்
ஆஸ்திரேலியா
ஆசியா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
கிழக்கு தென் அமெரிக்கா
வடகிழக்கு வட அமெரிக்கா
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல் மற்றும்
தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் கிரகணம் தென்படும்.
சந்திர கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
கிரகணத்திற்கு பிறகு குளிப்பது அவசியம் :
சந்திர கிரகணம் நடந்த பிறகு குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கிரகணத்தின் போது ஆபத்தான கதிர்களின் தாக்கத்தால் அசுத்தங்கள் ஏற்படுகின்றன. இதனால் குளிப்பது அவசியம் என்று கூறப்படுகிறது.கிரகணம் முடிந்த பின்னர் பொதுவாக நம் முன்னோர்கள் கடலில் குளிக்க வேண்டும் என்பார்கள் அல்லது நம் வீட்டிலேயே குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு அந்த தண்ணீரில் குளிப்பதால் நம்மை சுற்றியுள்ள தீவினைகள் நீங்கும். அதே போல் நம் உடலில் உள்ள நுண் கிருமிகள் மடியும்.
வீட்டை சுத்தம் செய்தல் :
கிரகணத்திற்குப் பிறகு வீட்டை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகணத்திற்குப் பிறகு, எல்லா இடங்களிலும் சிறிது உப்பு கலந்த நீரால் வீட்டை கழுவி விட வேண்டும்.கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம்-மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நல்லது.
கிரகணம் முடிந்ததும் ஐயர்களை அழைத்து பரிகாரம் செய்யலாம். அப்படி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கிரகணம் முடிந்த பின், வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்கவும்.
இறைவனை வழிபாடு செய்யுங்கள் :
கிரகணத்திற்குப் பிறகு பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை வணங்க வேண்டும்.வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யலாம். மேலும் நவகிரக சன்னதியில் உள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.
பின்னர் ஏதேனும் நைவேத்தியம் படைத்து வழிபட்டு பிரசாதத்தை சுற்றத்தாருக்கும், குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும். கடவுளுக்கு பிரசாதம் கொடுத்த பின்னரே உணவு மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சமைத்த உணவு :
கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து புதிய உணவை சமைத்து உண்ண வேண்டும்.தானம் செய்யுங்கள் :
கிரகணத்திற்குப் பிறகு முடிந்த அளவு தானம் செய்வது அவசியம் ஆகும். அச்சு வெல்லம், பால், அரிசி, நல்லெண்ணெய் மற்றும் தானியங்களை தானம் தருவது மிகுந்த பலனையும், புண்ணியத்தையும் தரும்.மேலும் பித்ருக்கள், குருக்கள், பிராமணர்கள், பாதிரியார்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு உங்களால் முடிந்த வரை உதவி மற்றும் அன்னதானம் செய்யலாம்.
கிரகணம் முடிந்த பிறகு புனிதமான ஏரி, குளம், கங்கை அல்லது வேறு ஏதேனும் புண்ணிய நதியில் நீராடி, முடிந்தவரை தானங்கள் கொடுக்க வேண்டும். இதனால் வீட்டில் செழிப்பு உண்டாகும்.
Our Nithra Matrimony App
Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Recent Blogs
- 📖What are the Best Matrimonial Sites in Tamil Nadu? Complete Guide on Top 10 Matrimonial site.
- 📖The most trusted second marriage matrimony site in Tamilnadu
- 📖Which is the safest and most trusted online matrimony website in Tamil Nadu?
- 📖Why matrimonial websites are most preferable way of searching life partners?
- 📖How to Protect Yourself from Online Matrimony Fake?
- 📖How to create Tamil matrimony profile?
- 📖Should we go with a matrimonial site or a marriage broker?
- 📖Tamil Hindu Matrimony Online: Finding A Soul Mate Was Never This Easy!
- 📖Choose your perfect second choice in the Right Remarriage Matrimonial Site
- 📖Paid Membership Vs Free Matrimonial Service
- View More