Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

Dhanraj

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!!

முன்னுரை

💝 இருபத்தேழு நட்சத்திரங்களில், பரணி நட்சத்திரம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். பரணி என்பது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இப்பெண் நட்சத்திரம் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது. இப்பதிவில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் மற்றும் பொதுப் பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். நீங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா? இன்னும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? நல்ல வாழ்க்கை துணை அமையுமானு இன்னும் ஏன் உங்களுக்குள்ளேயே குளம்பிக் கொண்டிருக்கீங்க! நித்ரா மணமாலையில் உங்கள் ஜாதகத்துக்கேற்ற பொருத்தமான வரன்கள் அதிகமாக உள்ளன. இப்பவே ரெஜிஸ்டர் பண்ணி வாழ்க்கைத் துணையை கண்டுபிடியுங்கள்..!!

குண அமைப்பு

💝 பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் பார்ப்பவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இவர்களுக்கு இருக்கும். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வது, மற்றவர்களின் பார்வை எப்போதும் தங்கள் மீது இருக்கும் வகையில் நடந்துகொள்வது போன்றவற்றை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் விருப்பம் அதிகம் இருக்கும். இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். எதையும் சிந்தித்து செயல்படும் திறன் கொண்டவர் என்பதால், ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்கும் இயல்புடையவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கிப் போனாலும், சரியான சமயம் வரும் போது காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பார்கள். புத்தகப் புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

குடும்பம்

💝 "பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள்" என்ற சொல்லிற் கேற்ப அரசர்களை போன்ற சுகமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எதையாவது அல்லது யாரையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்களை இமை பாதுகாப்பது போல பாதுகாத்துக் கொண்டு இருப்பார்கள். அதே போல உணவு சார்ந்த விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பது மட்டுமல்லாமல் சமைத்தவரை பாராட்டும் குணமும் இவர்களுக்கு உண்டு, இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டே இருக்கும். இவர்களுக்கு சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.

தொழில்

💝 எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள், தம்மை பின்பற்றும் வகையில் ஒரு வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பதவிகளை வகிக்கும் வல்லமை பெற்றிருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை அடிமைப்படுத்தாமல் வேலை வாங்கும் வல்லமை பெற்றவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். தோல்வியால் சரிந்து போன நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். பல், வணிகவியல், காது, கண் ஆகிய துறைகளிலும் பைனான்ஸ், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதிற்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை புரிந்து கொண்டு, வேலைன்னு வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

திசை பலன்கள்

💝 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். இவர்கள் பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால், இளமை கால வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலோ மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

💝 இரண்டாம் திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான பலன்கள் கிடைக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவார்கள். சந்திரன் 3ம் திசையில் இருப்பதால் சில குழப்பங்கள் மற்றும் நீர் சம்பந்தமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். சற்று சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும். செவ்வாய் திசையில் பூமி வாங்கும் யோகம் மனைவி வழியில் நன்மை தரும். 5வது திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் வலுவாக அமைந்திருந்தால் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களையும் சமூகத்தில் நல்ல பதவி உயர்வுகளையும் பெறலாம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

💝 ஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசை ஆகும். ஆனால் குருபகவான் வரும் காலங்கள் மேலும் முன்னேற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. குரு பலம்பெற்று அமைந்து விட்டால், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகளான பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யக் கூடிய அமைப்பு, தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

💝 மேற்கூறப்பட்டுள்ள திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும். இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நட்சத்திரம் மார்கழி மாதத்தில் இரவு சுமார் 10.00 மணிக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் சொந்த விருச்சிகமாகும். நெல்லி மரத்தை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

💝 பரணி நட்சத்திரத்தில் சங்கீதம், ஓவியம், நடனம், செங்கல் சூளை கொளுத்துதல், நடனம் ஆடுதல், தீர்த்த யாத்திரைகள் நடத்துதல், மூலிகைகள் பயிரிடுதல், ரோஜா உள்ளிட்ட மூலிகைகள் நடுதல் ஆகியவற்றுக்கு ஏற்றது.

வழிபாட்டு ஸ்தலங்கள்

💝 திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது.

💝 கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபடலாம்.

💝 திரு ஆவினன் குடியில் உள்ள நெல்லி மரத்தையும் வழிபடலாம்.

💝 சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருக பெருமானையும் வழிபடுவதும் நல்லது.

கூற வேண்டிய மந்திரம்

ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
சன்ய குமாரி தீமஹி
தள்நோ துர்கி பிரசோதயாத்

பரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

💝 பரணி, பூசம், பூராடம் அனுஷம், பூரம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கூடுதல் தகவல்கள்

💝 பரணி நட்சத்திர அதிதேவதை - துர்க்கை அம்மன்

💝 பரிகார தெய்வம் - துர்க்கை அம்மன்

💝 பரணி நட்சத்திரகாரர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் - வைரம்

💝 பரணி நட்சத்திரத்திற்குரிய மரம் (விருட்சம்) - நெல்லி (பாலில்லா மரம்)

💝 பரணி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் - மனுஷகணம்

💝 பரணி நட்சத்திரத்தின் மிருகம் - ஆண் யானை

💝 பரணி நட்சத்திரத்தின் பட்சி - காக்கை

💝 பரணி நட்சத்திரத்தின் கோத்திரம் - விசுவாமித்திரர்

பரணி நட்சத்திரத்தின் தோஷங்களைப் போக்கும் பரிகாரங்கள்

💝 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி நட்சத்திர மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

💝 லக்ஷ்மி-நாராயணரை வழிபடுவதன் மூலமும் அவர் அமைதி பெறலாம்.

💝 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பால், தயிர், வெள்ளைச் சந்தனம், வைரம் போன்றவற்றை, ஏதாவது ஒரு மாதத்தில் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அல்லது பரணி நட்சத்திர நாளில் தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

முடிவுரை

நீங்கள் பரணி நட்சத்திரத்தின் மணமகனாகவோ அல்லது மணமகளாகவோ இருந்தால், உங்கள் தேடலைத் தொடங்க நித்ரா மேட்ரிமோனி சரியான இடம். எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? நித்ரா மேட்ரிமோனியில் இன்றே பதிவுசெய்து, உங்களுக்கான சரியான பொருத்தத்திற்கான தேடலைத் தொடங்குங்கள்! பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நித்ரா மணமாலையில் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் பெறலாம்.

bharani natchaththiram


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.