Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Ashwini Natchathirathil Piranthavarkalin Vazakkai Ragasiyam

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!!

முன்னுரை

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் அஸ்வினி நட்சத்திரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அதிபதி கேது பகவான். இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்கள்? இன்னும் திருமணம் அமையவில்லை என்ற மன வருத்தத்திலேயே நாட்களை கழித்துக் கொண்டுள்ளீர்களா? நல்ல நேரம் வந்தாச்சு உங்களுக்கு! நித்ரா மணமாலையில் தினம் தினம் புதிய வரன்கள் பதிவாகி வருகின்றது, உங்களுக்கு ஏற்ற வரன்கள் அமைய உடனே இலவசமாக பதிவு பண்ணுங்க..!! மேலும் இப்பகுதியில் அஸ்வினி நட்சத்திரகாரர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றிப் பார்ப்போம்.

குணங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது பகவான் ஆவார். ஆகவே, ஒருவரைப் பார்த்தாலே எடை போடும் சக்தி உடையவர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பர். விதிகளின்படி பணிகளை முடிக்கும் மனசாட்சியுள்ள நபராகவும், சிறந்த சிந்தனையாளர் மற்றும் அதிகாரத்திற்கு பெயர் பெற்றவராகவும் இருப்பார்கள். செவ்வாய் மேஷத்தில் இருப்பதால், ஈகோ மற்றும் சுயமரியாதை அதிகம் இருக்கும். எதையும் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்படுத்துவார்கள். அடுத்தவர் சொல்லைக் கடைப்பிடிக்காதவர்களாகவும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பர். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் கூட, வந்த சண்டையை விடமாட்டார்கள். இவர்களுடன் வாக்குவாதம் செய்து வெற்றி பெறுவது என்பது அரிது. மேடைப் பேச்சுக்களில் கைதட்டல்களை பெறாமல் இறங்க மாட்டார்கள்.

குடும்பம்

கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாகத் என்று அலசி தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்த வரையில் காதல் யோகம் இருந்தாலும் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் காதல் திருமணம் நடக்கும். இல்லையெனில், பெற்றோர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே அமையும் என்று கூறலாம். தனது மனைவி மற்றும் குழந்தைகளின் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு அக்கறையுள்ள வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். தங்களைப் போலவே நீதியும் நேர்மையும் கொண்டவர்களாக குழந்தைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்தும் கொண்டு செயல்படுவார்கள்.

தொழில்

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழிலிலும் நேர்மையும் கண்ணியமும் அதிகம் இருக்கும். இதனால் சக ஊழியர்களாலும், உயர் அதிகாரிகளாலும் சில பிரச்சனைகளை சந்தித்தாலும் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைத்து மிக விரைவில் உயர் பதவிகளை அடைவார்கள். 24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் இவர்களுக்கு கிடைக்கும். பத்திரப்பதிவு, வானியல், வங்கி, மருத்துவம், வேதியியல், மருத்துவம், மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டுமானம் போன்ற துறைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். ஜோதிடம் சார்ந்த துறைகளிலும் ஈடுபாடு ஏற்படும்.

திசை பலன்கள்

🤗 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். கேது திசை மொத்தம் 7 ஆண்டுகள் நீடித்தாலும், பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு கேது திசை எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதை அறியலாம். கேது திசையின் போது உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கல்வியில் மந்தமான நிலையைத் தரும். சோம்பல் மற்றும் பிடிவாதத்தால் தாயின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.

🤗 சுக்கிர திசை இரண்டாம் திசையாக வரும். சுக்கிர திசை மொத்தம் 20 ஆண்டுகள் நீடிக்கும். கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால், இந்தக் காலகட்டங்கள் மேன்மையான பலன்களையும், ஆரோக்கியமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையையும் தரும். வாழ்க்கைத் தரமும் உயரும்.

🤗 மூன்றாவது திசை சூரிய திசை. பொதுவாக, மூன்றாவது திசை சுமாரான முன்னேற்றத்தை மட்டுமே தரும், எனவே நீங்கள் எதையும் எதிர்த்து நீந்த வேண்டியிருக்கும். இது தந்தைக்கு மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளை கொடுக்கும், உஷ்ண சம்பந்தமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.

🤗 சந்திர திசை நான்காவது திசையாக வரும் மற்றும் சந்திர திசை காலங்கள் 10 ஆண்டுகள் ஆகும். கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் இந்தக் காலத்திலும் தாயாருடன் மனக்குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் வந்தாலும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளத்தையும் தரும்.

🤗 ஐந்தாம் திசையான செவ்வாயின் அம்சம் மொத்தம் 7 ஆண்டுகள் நீடிக்கும். அஸ்வினி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் திசையான செவ்வாய் தோஷ திசையாக இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் செவ்வாய் பலம் பெற்று சிறந்த பார்வையுடன் இருந்தால் பொருளாதார மேன்மையும், யோகமும் உண்டாகும். நிலம் வாங்கும் யோகத்தையும், நல்ல சுக வாழ்க்கையையும் பெறுவார்கள். ராகு திசை 6ம் திசையாக வரும் மொத்தம் 18 வருடங்களில் சுபர் பார்வையுடன் ராகு சுபர் வீட்டில் வலுவாக அமைந்திருந்தால் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்கள், செல்வச் செல்வாக்கு மற்றும் வசதி வாய்ப்புகளைப் பெறலாம்.

🤗 மேற்குறிப்பிட்ட திசை காலங்களின் கிரகங்கள் வலுவாக அமைந்திருந்தால் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கூடுதல் தகவல்கள்

👉 அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வைரம் அணியக்கூடாது.
👉 அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டக் கல் வைடூரியம் ஆகும்.
👉 அஸ்வினி நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
👉 அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் சிறந்த பரிகார விருட்சமாகும். எட்டி மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.
👉 அஸ்வினி நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும் என்று கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை

👉 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பாதவர்கள் ஆவர்.
👉 எவரொருவர் தன்னுடைய தனித்துவத்திற்க்கு மரியாதை தருகிறார்களோ அவர்களை வாழ்க்கை துணைவர்களாக தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும்.
👉 பாதுகாப்பானவர்களும் அக்கறையுள்ளவரும் ஆவார்கள்.
👉 சந்தோஷமாக குடும்ப பொறுப்புக்களை ஏற்றும் நடத்தியும் கொள்வார்கள்.
👉 எளிமையான சுபாவத்தை உடையவர்கள். அதனால் எளிதாக தங்களுடைய துணைவர்களை புரிந்துக் கொள்வார்கள்.
👉 திருமணத்திற்கு பிறகும், தங்களின் பெற்றோர்களுடனும், உடன்பிறந்தவர்களுடனும் நல்ல உறவை கொண்டிருப்பார்கள்.

செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள்

அஸ்வினி நட்சத்திர நாளில் மனை முகூர்த்தம் செய்வது, புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவது, சாஸ்திரப் பயிற்சி தொடங்குவது, விதை விதைப்பது, மரக்கன்று நடுவது, கடல் பயணம் மேற்கொள்வது, தானியங்கள் வாங்குவது, மாட்டுக்கொட்டகை அமைத்தல், திருமணம், குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டையடித்து காது குத்துவது போன்றவற்றை செய்தால் நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசிக்கும் தன்வந்திரியை ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம். கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ் வரரும் அஸ்வினி நக்ஷத்திரங்களின் பரிகார தெய்வமாகும். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலிலும் வழிபாடு செய்யலாம். சென்னை திருவற்றியூம் மற்றும் திருவிடை மருதூர் கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.

மந்திரம்

சரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்
ஓம் வாக் தேவியை ச வித்மஹே
விரிஞ்சி பந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்!

முடிவுரை

மேலே கூறப்பட்டுள்ள அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியங்கள் பற்றிய தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாகவும் ஒரு தெளிவு பிறக்கும் விதமாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். மேலும் உங்களுக்கோ அல்லது உங்கள் மகன், மகள் மற்றும் உறவினர், நண்பர்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்து இன்னும் திருமணம் ஆகாமல் இருந்தால், இப்பவே நித்ரா மணமாலையில் அவர்களின் சுயவிவரங்களை பதிவு செய்து நல்ல வாழ்க்கை அமைய முதல் அடியை எடுத்து வையுங்கள். நித்ரா மேட்ரிமோனி!

ashwini natchatra


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.